கஞ்சன் இங்க வாடி

கஞ்சன், இங்க வாடி.
😊😊😊😊
யாரடி பொன்னி 'கஞ்சன்'னு கூப்புட்ட? ஒரு பேரு 'ன்'னுல முடிஞ்சா இது ஆம்பள பேரு. அப்பிடியே ஒரு கஞ்சம்பிடிச்ச மனுசனைக்கூட 'கஞ்சன்' னு கூப்புட்டா அந்த ஆளு சும்மா இருப்பானா?
😊😊😊😊😊
என்னோட பொண்ணத்தான் கூப்புட்டேன் பாட்டிம்மா. நாங்க வடக்க உத்ராஞ்சல் மாநிலத்தில குடியிருக்கிறோம். அஞ்சு வருசம் கழிச்சு ஊருக்கு வந்திருக்கிறோம். தற்காலத் தமிழர் வழக்கப்படி எம் பொண்ணுக்கு 'கஞ்சன்'ங்கற இந்திப் பேர வச்சுட்டோம்.
😊😊😊😊😊
ஏன்டி பொன்னி, போயும் போயும் பெத்த கொழந்தைக்குக் 'கஞ்சன்'னா பேரு வைக்கிறது.
😊😊😊😊😊
பாட்டிம்மா இந்தில 'கஞ்சன். தமிழ்ல 'தங்கம்'
😊😊😊😊
உம் பொண்ணுக்குத் 'தங்கம்'னே பேரு வச்சிருக்கலாமே?
😊😊😊😊😊😊
இல்லீங்க பாட்டிம்மா, 'தங்கம்'ங்கற பேர இந்திக்காரங்க 'தங்கா, தங்கா'ன்னு கூப்புடுவாங்க. அதுக்குத் தான் 'கஞ்சன்' ங்கற இந்திப் பேரையே வச்சுட்டோம்.
😊😊😊😊
சரீடி பொன்னி
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
■◆◆◆◆◆◆◆●◆●●●●●◆■■■■■■
தமிழோடு வாழ்ந்து இன்று இயற்கை எய்திய முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களுக்கு என் உளப்பூர்வமான இரங்கல்.

எழுதியவர் : மலர் (7-Aug-18, 8:50 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 155

மேலே