தலைவா

உங்கள் இலக்கணம் தனி
உங்கள்
இலக்கியம் தனி
நாடக தமிழும் தனி
கர்ஜிக்கும் குரல்
அதில் விழும் வார்த்தைகள்
ஆர்ப்பரிக்கும் தமிழ்
ஆளுமை கொஞ்சும் வரிகள்
ஐக்கியம் ஆன மொழி
கவிதை எழுதும் போதே
ஏனோ உங்களுக்காக
வழிகிறது
சிறு துளி கண்ணீர்.
உங்கள் தமிழ்
உச்சரிக்கும்
உங்கள் புகழ்.

- மூ.முத்துச்செல்வி

எழுதியவர் : மூ.முத்துச்செல்வி (7-Aug-18, 9:54 pm)
சேர்த்தது : மூமுத்துச்செல்வி
Tanglish : thalaiva
பார்வை : 177

மேலே