இருப்பது, இல்லாதது

கடவுள் இருக்கிறாரா
இல்லை என்கிறேன்
ஏன்......................?
அவர் ...காணவில்லையே
சரி, சரி........
நீ யார்..................?
நான் நாந்தான் வேறென்ன
அது வெறும் அகந்தையே !
என்......................?
நேற்று இருந்தவன்
இன்று காணாமல் போகிறான்
நேற்று இருந்தவன் இல்லையென்றாகிறான்
இல்லாத ஒன்று இல்லைதான்
நாளை மறையவிருக்கும் ஒவ்வொருவரும்
நாமெல்லாம் , உலகம் யாவையும்
இல்லாமல்போகும் ................மாயையே
கண் திறந்து பார்க்கிறோம்
இருக்கிறது ...........கண்மூடி திறக்கையில்
இருக்கிறது, இல்லாமல் போகுதே
இருப்பதெல்லாம் மாயையே
'அவனைத்தவிர' ......எந்த 'அவன்'?
'அவன்' விளையாட்டு பொம்மைகள் நாம்
அவன்தான் 'இறைவன்'.
சிலர் காண முயன்று தவமிருந்து
'அவனை' கண்டும் விட்டு ' கண்டேன்
என்று கூறி ............. எழுதிவிட்டு சென்றனர்
ஞானிகள் , சித்தர், என்று இவர்கள்
இவர்கள் நம்பவில்லை .....ஏன் ?
இவர்கள் காணவில்லை
இல்லை, இல்லை என்றே கூறி
காலத்தை வீணாக்கும் இவர்கள்
காணத்தொடங்கினால்....................
நிச்சயம் 'அவன்' இவர்களுக்கு
'காட்சி'தருவான் இல்லாமை இருளைப்போக்கி
'அவன்' மட்டுமே இருக்கின்றான்
மற்றவை அனைத்தும்
இருப்பதுபோல் இருந்தும்
இல்லாதவையே ........................

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (9-Aug-18, 9:13 am)
பார்வை : 426

மேலே