இயற்கை

ஒரு காற்று
தீமூட்டுது காட்டில்,
காட்டுத்தீ ..............
ஒரு காற்று குளிர்காற்று
மாலையில் கடல் காற்று,
நாம் அனைவரும் விரும்பும்
சுகக் காற்று.
ஒரு காற்று
ஆற்றங்கரை தென்றல்
காதலருக்கு தூதுவன்


ஒரு தீ
மிதமாய் இருந்திட
நலம் தரும் தீ
சுவைத்தரும் உணவு சமைக்க தீ
அதுவே பெருந் தீயாய் வளர
நாசத்தீ




























ஒரு நீர்
மழை நீர்
உழவருக்கு வாழ்வு
அனைவருக்கும் உயிர் நீர்
தண்ணீர் -அதுவே
பெருகிவர வெள்ளமாய்
உயிர்க்குடி நீர்

ஒரு மண் , உர மண்
நீரும் கிடைத்திட
நம்மை வாழவைக்கும்
நல்ல மண்- அதுவே
மழை இல்லாது போகிற
நம்மை காயவைக்கும்
பாலையாய் மண்

ஒரு ஆகாயம்
நமக்கு உயிர் தந்திடும்
மாசில்லா பிராணவாயு தந்து
அதில் மாசு
மக்களுக்கு உயிர்க்கொல்லி


.

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (9-Aug-18, 12:14 pm)
Tanglish : iyarkai
பார்வை : 1210

மேலே