இல்லாமல் இல்லை
நிழலுக்கு வெளிச்சம் இல்லா
வாழ்க்கை இல்லை .
நினைவுக்கு வலிகள் இல்லா
காலம் இல்லை .
நிலவுக்கு கதிரவன் இல்லா
வெளிச்சம் இல்லை .
நிஜத்திற்கு பொய்கள் இல்லா
மெய்கள் இல்லை .
நிலத்திற்கு மண் இல்லா
வாசம் இல்லை .
நிறத்திற்கு கரை இல்லா
பெயர்கள் இல்லை .