புதைந்த சிலை 12

சிலை கிடைத்துவிட்டது என ஊர்மக்கள் அனைவரும் கொண்டாட்டத்தில் திருவிழா வெகு விமர்சையாக நடத்தி முடித்தனர். பத்து நாட்கள் கழிந்தது.
அதிகாரி மோகினி தன் வேலையை தொடங்கு ஆரம்பித்துவிட்டார். விசாரணையில் வெகுவாக நடத்த ஆரம்பித்துவிட்டார் தன் குறிப்பேட்டில் குறிப்பிட்ட பூசாரி, ஊர் தலைவர், ஆலமரத்து லிங்கம் மற்றும் சிலை கடத்தல் கும்பல் அதற்கும் மேலாக அந்தக் காடு அடுத்த இரண்டு ஊர்கள். பாண்டியன் சாட்சியும் அவர் மகள் கயல் சாட்சியும் வைத்துக்கொண்டு வழக்கைத் தொடர்ந்தார்.
அந்த ஜீப் யாருடையது என்பதை முதலில் ஆராய ஆரம்பித்தார் வழக்கு மிகவும் வேகமாக போய் கொண்டிருந்தது விசாரணையும் கடுமையாக இருந்தது.
மற்றும் கைரேகைகளும் கையில் வைத்துக் கொண்டார். அந்த கைரேகை அவருக்கு பொருத்தமாக இருக்கிறதோ? அவர்கள்தான் சிலையை திருடி இருப்பார்கள். ஏன் புதைத்தார்கள்? என்றுதான் தெரியவில்லை இருந்தாலும், அந்த வழக்கில் ஏதாவது தீர்வு ஏற்படுமா என்று மிகவும் கவலையுடன் அதிகாரிகள் விசாரித்து வந்தார்.
விசாரணையில் அந்த ஊர் மட்டுமல்லாது பக்கம் இருந்த அனைத்து ஊர்களையும் விசாரிக்க ஆரம்பித்து விட்டார். மற்றும் சிலைகள் சில இருந்தன அச்சிலைகள் எந்தெந்த ஊருக்கு சொந்தமானது என கண்டறியும் பணியிலும் ஈடுபட்டார்பிறகுதான் தெரியவந்தது அது இந்த ஊரை அடுத்த சில ஊர்களில் தள்ளி இரண்டு மூன்று ஊர்களுக்குச் சொந்தமானது. அச்சிலைகளை அந்த ஊரில் ஒப்படைத்துவிட்டார்.
அங்கும் ஆய்வுகளை மேற்கொண்டு அங்கு சில திருப்பங்கள் ஏற்பட்டது. வழக்கில் மிகப்பெரிய திருப்பம் அது.

வழக்கை அருமையாக நடத்திக்கொண்டிருந்தார். விசாரணையில்மேலதிகாரியுடன் ஆலோசனைகள் பெற்று திறமையாக நடத்திக் கொண்டிருந்தால் அந்த திருப்பம் முக்கியமான திருப்பம்.

அந்தக் காட்டில் காவல்துறை கண்காணித்து கொண்டு இருந்தனர். மேலும் சிறிது தூரத்தில் இருக்கும் திருட்டு போன ஊர்களிலும் ஊர் மக்களிடமும் விசாரணையை தொடங்கிய பின்னர் ஏற்பட்டது ஒரு நிகழ்வு அதிகாரி மோகினிக்கு,
அந்த திருப்பம் என்னவென்று கேட்கிறீர்களா?
சிலைத் திருட்டை ஒழிக்க மிகவும் எதிர்பாராத திருப்பம் அது. இவ்வழக்கை தொடரும் மோகினிக்கே தெரியும்.........

அதிகாரி மோகினியுடன் நாமும் இவ்வழக்கை தொடருவோம். குற்றம் செய்தவன் தண்டிக்கப்பட வேண்டியவர். குற்றங்கள் குறைய வேண்டும். சிலைத் திருட்டை செய்பவர் யார் என்று அறிய ஆவலாக தான் இருக்கின்றது. எனினும் அதிகாரி மோகினி அவர்களுடன் இந்தத் திருட்டை விசாரணை செய்வோம்.

எழுதியவர் : உமா மணி படைப்பு (9-Aug-18, 8:04 pm)
சேர்த்தது : Uma
பார்வை : 85
மேலே