தன்னம்பிக்கை

பூமிக்குள் புதைந்த விதைக்கு இத்தனை சக்தியா?
விதை முளைத்து உயிர் பெற்று விளைகிறது அதன் முயற்சியால்,

முயற்சிக்கு இது ஒன்று போதும் என நினைத்து திரும்பிப் பார்க்கின்றேன்,

எறும்பு வரிசையாக கால்களின்
பக்கம்
மழை வரப் போகின்றது
வருமுன் காப்போம் என்ற யோசனை தன் உணவைத் தேடி தானே சேர்க்கிறது தன் முயற்சியால்.....

மனிதா உன்னுள் ஒருவன் உனக்குள் ஒருவன் நீ மட்டும் தனிமையில்
அல்ல


உன்னை நீ முதல் வென்று வா
முயற்சிகளை படிக்கட்டாக
மாற்று முழுமனதாய் .......

சோம்பலை விலக்கு
சோகத்தை விரட்டு
வெற்றிகள் அனைத்தும் உனக்கே
புகழ் அனைத்தும் உனக்கே.......

எழுதியவர் : உமா மணி படைப்பு (9-Aug-18, 8:16 pm)
சேர்த்தது : Uma
Tanglish : thannambikkai
பார்வை : 413
மேலே