கலைஞர் அவர்களுக்கு கண்ணீர் அஞ்சலி

எங்கு நீ செல்கிறாய் என் தலைவா?
எங்கு நீ செல்கிறாய் என் தலைவா ?
இங்கு கோடி மக்கள் உனக்காய் தவம் கிடக்க
எங்கு நீ செல்கிறாய் என் தலைவா?

மாற்றலுக்குப் புதுஆற்றல் தந்தவனே நீ
ஆற்றியப் பணிகள் ஆயிரம் ஆயிரம்
தூற்றலையும் பெருந்தன்மையுடன் ஏற்று
போற்றுதலாய் சாற்றியதே உன் சொல்லாயுதம்

சரித்திரமே ஓய்ந்தது போல்
காவேரியில் நீ சாய்ந்திருக்க
எழுந்து வா தலைவா
எழுந்து வா தலைவா என
கோடி உள்ளங்கள் கோஷமிட்டு கதறியழ
எமனை வென்று வந்திடுவாய்
நூற்றாண்டு கடந்திடுவாய் என்ற
நம்பிக்கையோடு யாம் இருந்தோம்
நாற்றில் நம்பிக்கை வைத்து
வேற்றுலகம் ஆள சென்றுவிட்டாயே!

வேற்றுமை துறந்து இதயங்கள்
போற்றிப் புகழாரம் சூட்டி பின்
ஆற்றாமையில் அழுது புலம்பி
அஞ்சலி செலுத்த நிறைகிறது

கதிரொளி உன் முகம் காட்டும்
காற்றலையில் உன் குரலை ஒலிபரப்பும்
சீற்றம் குன்றி வங்கக் கடல்
அலைகரத்தால் உன் திருவடி வருடும் இனி
அறிஞர் அருகில் கலைஞர் என்று
அகிலம் என்றும் உமைப் போற்றும்

சென்று வா தலைவா....
கனத்த இதயத்தோடு வழியனுப்புகிறோம்....
உன் பூதவுடல் மண்ணின் பாத்தியம்
உன் புகழுடல் காலத்தின் நித்தியம்
தமிழ் உள்ளவரை தமிழினம் உள்ளவரை
தரணி ஆள்வாய் இது சத்தியம்!

கண்ணீருடன் உன் கோடானுகோடி தொண்டர்களில் ஒருத்தி
கவிதாயினி அமுதா பொற்கொடி

எழுதியவர் : வை.அமுதா (10-Aug-18, 11:17 am)
பார்வை : 43
மேலே