வரமோ வரம்

காற்றுமழை சீற்றத்துடன் கைகோர்த்து நட்பாகி
கீற்றுக் கொட்டகையில் வாழ்வது வரமே....

சேற்றில் கால்பதித்து நாற்றங்கால் நட்டு
சோற்றுக்குப் பஞ்சமின்றி தன்னிறைவாதல் வரமே..

நாற்றிசை நூல்யாவும் நற்றமிழில் இயற்றி
வேற்றுலகம் குடியேற்றி விண்மொழியாக்கல் வரமே...

தோற்றப்பிழையோடு தொடரும் கனவலைகள்
தேற்றமாய் நனவாகி பயணித்தல் வரமே....

நூற்றாண்டு கடந்த புதுமைகள் மலர்ந்திட
மாற்றம் தந்திடும் நல்படைப்புகள் வரமே...

ஆற்றுப்படுகை ஊற்றாகப் பெருக்கெடுத்து
வற்றாது கழனி பாய்ந்து வளம்செழித்தல் வரமே....

கற்றல் கற்பித்தல் வழிமுறைகள் பொதுவாகி
ஏற்றத்தாழ்வற்ற சமத்துவக் கல்வித்திட்டம் வரமே..

குற்றம் குறைவற்ற நாட்டின் நலம் பேணும்
ஆற்றல்மிகு தலைமை ஆளுதல் வரமே...!

கவிதாயினி அமுதா பொற்கொடி

எழுதியவர் : வை.அமுதா (10-Aug-18, 11:24 am)
பார்வை : 70

மேலே