கலங்காதே மனிதா

கொதிக்கக் கொதிக்க பால் சுவைக்கும்
கடுகளவு உறைமோரால் தயிராய் புளிக்கும்
கடையக் கடைய வெண்ணெய் திரளும்
காய்ச்ச காய்ச்ச நெய்யாய் மணக்கும்

காலங்கள் செல்லச் செல்ல
கடுமைகள் கூடக் கூட
வலிமைகள் மனவுரம் சேர்க்கும்
வாழ்வின் மதிப்பை பன்மடங்காய் பெருக்கும்

காய்த்தலும் கொதித்தலும்
கடைதலும் கரைதலும்
உறைதலும் திரைதலும்
உருகுதலும் உழலுதலும்
காலத்தின் கோட்பாடுகள்

கலங்காதே மனிதா.....
கடமையில் கடந்து செல்....
காலடிமண் அச்சுக்கள் வார்க்கும் அது
காலக் கண்ணாடியில் உன் உருவத்தை பொறிக்கும் ....

கவிதாயினி அமுதா பொற்கொடி

எழுதியவர் : வை.அமுதா (10-Aug-18, 11:27 am)
பார்வை : 137

மேலே