விதவைகள்

இல்லற தோட்டத்தில்
பந்தலில்லாத கொடிகள்

விதியின் கடலில்
துடுப்பில்லாத படகுகள்

ஆண் படகுகளால்
தனித்து விடப்பட்ட
நங்கூரம்

குறுக்கே வரும் பூனையும்
குங்குமம் இல்லா இவளும்
ஒன்று


சுப நாளில் சமூகத்தில்
விலக்கப்பட்ட வித்தியாசமான
அர்ச்சனை தேவதை

ஆம் இவள் வாழ்க்கையில் ஓர் முரண்பாடு

இவள் கண்டது காதல் தோல்வி அல்ல
மாறாக கல்யாணத்தோல்வி

எழுதியவர் : ilaval (10-Aug-18, 2:53 pm)
பார்வை : 55
மேலே