அன்புப் பேழை முத்து அம்மா

இதழ்ப்பேழை முத்துக்கள் புன்னகை
இதயப்பேழை முத்துக்கள் கவிதை
அறிவுப்பேழை முத்துக்கள் சிந்தனை
அன்புப்பேழை முத்து அம்மாநீ

இதழ்ப்பே ழைமுத்துக் கள்வெண் புன்னகை
இதயப்பே ழைமுத்துக் கள்நற் கவிதை
அறிவுப்பே ழைமுத்துக் கள்உயர் சிந்தனை
அன்புப்பே ழைமுத்து அம்மாநீ தானே !

-----வரிகள் யாப்புவழி நிலை மண்டில ஆசிரியப்பாவாக

இதழ்ச்செம்பே ழைமுத்து புன்னகை வெண்மை
இதயப்பே ழைமுத்துக் கள்நற் கவிதை
அறிவுப்பே ழைமுத்துக் கள்உயர் சிந்தனை
அன்புப்பே ழைமுத்(து )அம் மா !

------இப்பொழுது இன்னிசை வெண்பாவாக

எழுதியவர் : கவின் சாரலன் (10-Aug-18, 6:54 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 418

மேலே