போதும் தலைவா விழி

கருணாநிதி ஒரு சகாப்தம்
அது கடந்தது நவதசாப்தம்
ஊரெங்கிலும் குழப்பம்
கருணாநிதி மட்டும் நிசப்தம்

காவேரி ஒரு பேராறு
அது கலைஞரை காக்க வந்த பாலாறு
கலைஞர் வழி வந்த பாலாறு
அதை நிறுத்திவிட்டது பூவாறு

இரங்கலிலே தலைவர்
குழப்பதிலே இளைஞர்
கடலுக்கு செல்லவில்லை வலைஞர்
துயிலிலே கலைஞர்

பெற்றெடுத்து கனிமொழி
வளர்த்தெடுத்து தமிழ்மொழி
உயர்த்தியது செம்மொழி
போதும் தலைவா விழி

பதினோரு நாட்கள் படுக்கை
அது குறைத்து தலைவரின் மிடுக்கை
காணவில்லை கலைஞரின் துடுக்கை
வாங்கிவிட்டாரே அவர் விடுக்கை

சிவப்புடன் கலந்த கறுப்பு
அதுவே மக்களின் விருப்பு
கொழுந்துவிட்டெரிகிறது நெருப்பு
தலைவா நீ வழமைக்கு திரும்பு

கதறி அழுகிறார் தளபதி
இதுவே எங்கள் தலைவிதி
தலைவர் கலைஞரின் முகமதி
ஒருமுறை கண்டால் நிம்மதி

எழுதியவர் : இமையவன் (12-Aug-18, 8:27 pm)
சேர்த்தது : Imyavan
பார்வை : 38
மேலே