வாழ்க்கைப் பாதையில்

வாழ்க்கைப் பாதையில்...

மனத்திசையில் எழும் அலைகளெல்லாம் அடங்கணுமே!! 

இதயத்தை அழுத்தும் வழிகளெல்லாம் மறையணுமே!! 

கண்களை பணிக்கும் கண்ணீரின் காரணங்களை மறக்கணுமே!! 

கள்ளமில்லா வாலிபம் சரியான திசையில் பயணிக்கணுமே!! 

பொறுமைக்காக்கும் நாவுகளுக்கு ஆறுதலான வார்த்தைகள் கிடைக்கணுமே!! 

தீயவழி நடவாத கால்ங்கள் கண்ணியத்தை காத்துக் கொள்ளணுமே!! 

முடியுமென்று எண்ணின காரியங்களின் தாமதம் விலகணுமே!! 

எண்ணங்களைப் பூட்டிவைக்க எதிர்பார்ப்புகள் விலகணுமே!! 

காத்திருக்க வைத்த இரகசியங்கள் அதன் பலனைத்தர முயலணுமே!! 

தொடரும் காரணங்கள் எல்லாம் முற்றுப்புள்ளி பெறணுமே!! 

இயலாமை என்று உரக்கச் சொல்லும் நாவுகள் முதலில் தன்னை உணரணுமே!!

எழுதியவர் : ஜான் (12-Aug-18, 8:31 pm)
சேர்த்தது : ஜான்
பார்வை : 393
மேலே