நம்மால் முடியும்

நம்மால் முடியும்...

எப்போதும் அயலானைப்போல் பிரதி எடுக்காதே... 

அப்படி எடுத்தால், நீயும் இன்னொரு அயலானாவாய்..

ஆசைகள் அனைவருக்கும் இருக்கும்; வெறி ஒரு சிலருக்குத்தான் இருக்கும்... 

ஆசைகள் அடிக்கடி தோற்கும்; வெறி தோற்காது... 

வெற்றி அடைந்தே தீருவேன் என்பதே வெறி...

எப்போதும் கண்டிப்பினால் கரைந்து போகமாட்டாய்... 

காலத்தை தவறவிடாதிருக்க கண்டிப்பு அவசியம்... 

இலக்கை நோக்கி பயணிக்க கண்டிப்பு தேவை... 

தவறுகளில் விழாதிருக்க கண்டிப்பே முக்கியம்...

அதிர்ஷ்டசாலி வாய்ப்பு வரும்போது முழித்துக் கொண்டிருப்பான்... 

வாய்ப்பு வரும்போது தூங்கியவன் அதிர்ஷ்டசாலியல்ல... 

வாழ்வில் முடிவற்ற வாய்ப்புகள் கிடைக்கப் பெறுபவனே அதிர்ஷ்டசாலி... 

அதிர்ஷ்டம் இல்லையென்று உட்கார்ந்தே இருப்பவன் சோம்பேறி...

போட்டியாளர்களைப் பார்த்தால், வாய்ப்புகள் தெரியாது... 

வாய்ப்புகளைப் பார்த்தால், போட்டியாளர்கள் கண்ணில் படமாட்டார்கள்...

எது சரியாக செய்வதென்பதைக் கற்பது அவசியமல்ல... 

எது தவறாக செய்யக்கூடாது என்பதைக் கற்பதே அவசியம்...

எழுதியவர் : ஜான் (12-Aug-18, 8:50 pm)
சேர்த்தது : ஜான்
Tanglish : nammaal mudiyum
பார்வை : 857
மேலே