திருடனாய்ப் போன பட்டாம்பூச்சி

கிண்ணத்தில் உணவு காட்டிய
கண்ணத்தில் முத்தம்
தாயின் பரிவு

அகவை ஐந்து ஆட்டிய
விரல்களும் ஐந்து
சேயின் பிரிவு

ஈன்ற அந்த மைந்தன் இன்றி
மழலைப் பள்ளி சென்றது
திரவியம் தேடிச் சென்று
திங்கள் பத்தும் ஆனது

சமைத்த களைப்பில் அவளோ
சாய்ந்து அமரலானாள்
இக்காலச் சூரியனின்
பொத்தானை அழுத்தலானாள்

எட்டு வயது நிலவை
எட்டுப் பறித்த கயவன்
பத்து வயதுப் பூவை
பாகம் பார்த்த கொடூரன்

காணொளியில் காதால் கண்டு
கண்டு கண்கள் ஈரமானாள்
சென்ற மகளை நிணைத்து
ஐயம் கொல்லல்லானாள்

தலையிலும் காலிலும்
மறந்தாள் பூவை
தரையில்லை நீரிலே
நடந்தாள் பாவை

வீடுவரும் மழலைகளை
விழியில் நோக்கலானாள்
ஏடேந்திய தன்மகளை
வழியில் தேடலானாள்

கருமை நிறக் காலணிகள்
ஓரம் அங்கே சாலையில்
அருமை மகள் பைக்கூடும்
தூரம் அங்கே சாலையில்

கண்ணிரண்டில் கடல்பெருகி
வளைவில் சென்று தேடினாள்
புண்ணகையின் கடல்முத்தாய்
தொலைவில் மகளைப் பார்கிறாள்

அங்கே மழலை
எட்டிப் பிடிக்க நிணைக்கிறாள்
திருடனாய்போன பட்டாம்பூச்சியை...
கட்டி அணைத்து பிள்ளையய்
முத்தம் கொஞ்சவில்லை
தொட்டாச் சுருங்கி கண்ணத்தில்
தொடர் இடிகள்
சற்றே நகர்ந்த நொடிகள்....

ச. ஜார்ஜ்

எழுதியவர் : ச.ஜார்ஜ் (12-Aug-18, 10:57 pm)
பார்வை : 50
மேலே