புதைந்த சிலை 13

மிகப்பெரிய திருப்பம் இவ்வழக்கில்,
விசாரிக்கப் போன இடத்தில் அதிகாரி மோகினி சிலவற்றை ஆராய்ந்தார் . அந்த இடத்திலும் சிலருக்கு சிலைகள் திருட்டு போய் இருந்தன. அதனைப் பற்றியும் அங்கிருந்த காவல்துறைக்கு ஏற்கனவே வழக்கு போய்க்கொண்டிருந்தது. அங்கே வசிக்கும் ஊர் மக்களிடம் விசாரிக்க அவர்களுக்கும் எதுவும் தெரியவில்லை.
அதிகாரி மோகினி அவ்வூரில் இரண்டு நாட்கள் தங்கி இருந்து ஏதாவது சாட்சிகள் கிடைக்குமா கிடைக்குமா என ஆராய்ந்தால் அங்கே கைரேகை நிபுணர்கள் வந்தனர். அங்கு கிடைத்த கைரேகையும் ஏற்கனவே இருந்த கைரேகையும் ஒன்றே.
ஆச்சரியமடைந்த அதிகாரி மோகினி அங்கே ஊர் தலைவர் அவர்கள் வீட்டில் இருந்து தடையங்கள் கண்டறிய ஆரம்பித்தார்.
அன்று இரவு அவருக்கு உறக்கம் வரவில்லை.
இருட்டிய வேலை அது. அனைவரும்
உறங்கி அமைதியாக இருக்கும் போது அதிகாரி மோகினி பால்கனியில் உலாவிக் கொண்டிருந்தார்.

தூரத்தில் ஒரு உருவம் யார் என்று தெரியவில்லை அந்த இருட்டில்.....

முகத்தில் துணி கையில் கத்தி
ஒர் இருவராக
பேசி கொண்டிருந்தனர்.அவர் உற்று நோக்க
பால்கனியில் இருந்து
யார் அங்கே? என
கேட்க, அவர் இறங்கி வருவதற்குள்
தப்பி ஓடினார்கள்.
மேலும் அவர்கள் கையில் இருந்த
கத்தியை தவற விட்டு
சென்று விட்டார்கள்.....
அவர் கத்தி இறங்குவதற்கு
முன் காவலர்கள் இருவர் துரத்தி பிடிக்க முயற்சிக்க
பிடிக்க முடியவில்லை....
பின் அக்கத்திகளை
கைரேகை நிபுணர்களிடம்
கொடுக்க சொல்லி அதிகாரி
உத்தரவிட்டார்..

மறுநாள் காலை கைரேகை நிபுணர்கள் ஆய்வு செய்து பார்க்க அக்கைரேகை அவ்விரு கைரேகையுடனும் பொருந்தி இருந்தது......
மிக பெரிய திருப்பம்
என அதிகாரி மோகினி நினைக்க ஒரு யோசனை
தோன்றியது.
நான் இங்கே இருக்கிறது எல்லாருக்கும்
தெரியும்.இருந்தும் ஏன் இவர்கள் வந்தனர்.
அது மட்டுமல்லாது கைரேகையை விட்டு சென்றனர்.
ஆழ்ந்த சிந்தனையில் இருக்க இதில் ஏதோ மர்மம் இருக்கிறது.....
என்னை நெருக்கமாக
கவனித்து வழக்கை திசை திருப்ப முயற்சி செய்கின்றார்கள்.....
யாராக இருக்கும்???????

யார் அந்த வழக்கை திசை திருப்புவது? யாராக இருக்கும் வாசகர்கள் தெரிவிக்கலாம் உங்கள் யூகத்தை............

எழுதியவர் : உமா மணி படைப்பு (12-Aug-18, 11:17 pm)
சேர்த்தது : உமா
பார்வை : 75

மேலே