புதைந்த சிலை 14

கைரேகைகள் ஒத்துப் போனது எனினும் அந்த சிலை திருட்டு வழக்கில் ஏனோ மிகப்பெரிய குழப்பம் மிகவும் குழப்பத்தில் இருந்தார் இந்த வழக்கு ஏன் இப்படி போய்க் கொண்டே இருக்கின்றது முடிந்துவிடும் என்று வெகுவாக நினைத்தார் அதிகாரி மோகினி.

இரண்டு நாட்களுக்கு பிறகு ஊர் திரும்பினார். அப்பொழுது வரும் வழியில் மிகப் பெரிய பாலம் ஒன்று இருந்தது .இந்த பாலத்தின் இறுதியில் தென்ன மர தோப்பு காணப்பட்டது. அதிகாரி மோகினி வாகன ஓட்டுனர் மற்றும் ஒரு காவலர் மூவரும் பயணிக்க அந்தத் தென்னந்தோப்பின் அருகில் அவர்கள் பயணிக்கும் வாகனம் பழுதாகி நின்று விட்டது. அதிகாரி மோகினி என்ன ஆயிற்று என்று கேட்க சிறு பிரச்சினை சிறிது நேரத்தில் சரியாகிவிடும் என்று ஓட்டுநர் சொன்னார்.; சுற்றிலும் உதவ ஆட்களும் கிடையாது அவள் சுற்றும் முற்றும் பார்த்தார் வெகு தொலைவில் ஒரு பாழடைந்த வீடு தென்பட்டது ஓட்டுநரை சரிசெய்ய சொல்லிவிட்டு காவலரும் அதிகாரி மோகினியும் அந்த வீட்டை நோக்கி பயணித்தனர். வீட்டை நெருங்க நெருங்க இரண்டு மூன்று பேர் முகங்களில் துணிகளை மூடிக்கொண்டு அவர்களை தாக்க முற்பட்டனர்.
அவர்கள் தங்களை காத்துக்கொள்ள அவர்களிடமிருந்து தள்ளிவிடுவது அவர்களை தாக்கவும் செய்தனர். சிறிது தூரம் அப்படி செய்து கொண்டே வரும்போது மிகப்பெரிய வைக்கோல் புதர்ஒன்று இருந்தது.


அதிகாரி மோகினி தாக்கி ஒருவர் அற்புதரின் மேல் விழுந்தார். அடுக்கி வைத்த அந்த புதர் அழகாக கலைந்தது அதில் உள்ளே ஒரு ஜீப் நின்று கொண்டு இருந்தது. இவர்களை தாக்குவதை கண்டு ஓட்டுனர் அங்கிருந்து கத்த தொடங்கினார். ஊர் மக்கள் அங்கு சூழ்ந்தனர் இதற்கு மேல் இவர்கள் தாக்குவது மூடத்தனம் என அறிந்து அவர்கள் தப்பி ஓட முயன்றனர் அவர்களை பிடிக்க முயற்சித்து தோற்றுப்போனார் அதிகாரி மோகினி.....

எழுதியவர் : உமா மணி படைப்பு (13-Aug-18, 1:50 pm)
சேர்த்தது : உமா
பார்வை : 180

மேலே