தேவார வெண்பா மாலை

தேவார வெண்பா மாலை
(வாசித்தளித்த இடம் திருப்பத்தூர் - நாள்:6.8.2018)

தமிழ்த்தேவா ரம்தெய்வ நூலாம் தமிழர்
தமிழ்நாட்டுக் கோர்காவல் தெய்வம் -- தமிழா
இவர்க்கேன் தமிழ்பேரை வைத்தார் தவமோ
தவமில்லை தேவவரம் பேர்

தேவையிலா வைத்தனரோ தேவவரம் பெற்றோரும்
தேவையான நல்வரம் ஈய்ந்திடும் -- தேவனிவர்
பிற்காலத் தைக்கணித்தா ரோஅவர் பெற்றோரும்
ஏற்றாரி வர்மிகநன் றே

சிவனெனும் நந்தமிழ் தெய்வம் அவர்க்கு
இவன்நல்லன் கெட்டானில் லைபார்-- இவற்றைதான்
வேண்டுதல் வேண்டாதா னைக்கடவுள் ஒப்புவமை
என்றாரோ வள்ளுவ ரும்

இக்குணந்தான் வேண்டியவன் வேண்டாதான் எக்கணமும்
கேக்காராம் தேவாரம் ஆயினும் -- கேக்கக்
கொடுப்பார் இவரும் அடுக்காசெய் தானைக்
கெடுக்காக்கொ டுத்தபெரு மாள்

கெட்டவர் நல்லார் அறிவரிவர் தட்டாது
கேட்டதைகொ டுப்பார்பார் கர்ணன்போல் --விட்டார்
சிவன்போல பாரபட்சம் ஈவார் பெருமாள்
சிவன்ஹரி யாரிவரே தான்

சுட்டார் குறிதவறா சுட்டார் பலபரிசு
சுட்டார் கடத்தலை ஆற்றிலேமின் --போட்டிலே
சுட்டாரே அட்டகாச மீனவரை ரோட்டிலே
சுட்டாரெட் டாப்பரிசை யும்

இவரே நவரசம் வீரம் உவத்தல்
எவரையும் பாய்ந்துசாய்த்தல் கண்டோம் --தவறாதே
சுட்டார் படபட வென்றுதான் சட்டெனச்
சுட்டார்அஞ் சாச்சுட்டா ரே

தவறா ஒழித்தாரே நக்சல் தவறா
தவறாவீ ரப்பன் அழித்தார்-- தவறா
அழிந்ததுநக் சல்கள் ஒழித்தார் திருட்டை
பழிக்குபதில் அஞ்சாச்சொன் னார்


ஆசிரியப்பா
ஆதலின் இவரைத் தெய்வ மென்றார்
ஆதவன் போல்பலர் சட்டசிக்கல் அறுத்தார்
பாதக மில்லாப் பொற்காலம்
பார்த்தோம் நாங்கள் அனுபவித்து பார்த்தோமே

காவலர் தெய்வம் தேவாரம் வாழ்க வாழ்கவே !!!

குறிப்பு :
தமிழர்க்கு தெய்வநூல் தேவாரம் - தேவாரம் (கிருத்துவர்) காவலரின் தெய்வமாம் - கிருத்தவர்க்குத் தமிழ்ப் பேர் எப்படி வைத்தார் அவரின் பெற்றோர்?
தேவாரம் இல்லை அவர் பேர், தேவவரமாம்.

பிற்காலத்தில் வரம் கொடுக்கும் தேவனாய்த் இருப்பார் என்றுத் தெரிந்தே வைத்தார் போலும் - சிவனுக்கு வேண்டியான், வேண்டான் கிடையாதாம் -வள்ளுவர் சொன்னார்; இதேபோல் D. G. P. தேவாரம் அவர்களுக்கும் வேண்டியவன் வேண்டாதவன் கிடையாது - பெரிய தவறை செய்தவனுக்கும் நல்லதை செய்தவனையும் ஒரே மாதிரியாகத்தான் பார்ப்பார். ஆகையால் இவர் சிவனென்றும் -- யார் எதைக் கேட்டாலும் கர்ணனைப் போல் கொடுப்பதால் பெருமாள் என்றார் பயனடைந்தோர்.

துப்பாக்கிச் சூட்டில் இந்தியாவின் தலை சிறந்தவர், பல பரிசுகளை பெற்றார் - அநியாயத்தைச் சுட்டார் - குறிதவறாது நக்சலை சுட்டார். தவறா?
சந்தனத் திருடன், யானைத் தந்தத் திருடன், சுமார் 100 க்கும் மேற்பட்ட அதிகாரிகள் மற்றும் பொது மக்களையும் கொன்ற வீரப்பனை அழித்தாரே தவறா?

கடத்தலை ஆற்றில் மின் போட்டில் நின்று சுட்டார். மீனவர்கள் 1979-ல் மெரினாவில் இரு கோஷ்டிகளாக பயங்கர ஆயுதங்களுன் மோதிய போது இருவரைச் சுட்டுக்கொன்று கலவரத்தை அடக்கினார்.

அண்ணாசாலையில் நடந்த பல கலவரங்களையும் நேரில் சென்று அடக்கினார். நவரச நாயகனான இவரிடம் அதிகமானது வீரமே - பலரின் சட்ட சிக்கலை யாரும் எதிர்பாராது தீர்த்திடுவார். அது தமிழ் நாட்டின் பொற்காலமாம்


இவ்வண்
ராஜன் பழனி
மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் (ஓய்வு)
வேலூர் 632001

எழுதியவர் : பழனி ராஜன் (14-Aug-18, 10:08 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 622

மேலே