சுதந்திர தின உரையில் முந்தைய அரசுகளை தாக்கி பேசிய மோடி

இன்று 72-ஆவது சுதந்திர தினத்தையொட்டி பிரதமர் நரேந்திர மோடி கொடியேற்றி வைத்து தனது உரையை தொடங்கினார். அப்போது அவர் பேசுகையில் கடந்த 4 ஆண்டுகளில் பல்வேறு துறைகளில் அசுர வளர்ச்சி அடைந்துள்ளது.

பேரிடர் காலத்தில் கருணையுடனும் பகைவர்களிடத்தில் ஆக்ரோஷத்துடனும் வீரர்கள் உள்ளனர். பாஜக ஆட்சி காலத்தில் புதிதாக எய்ம்ஸ், ஐஐடிகளை உருவாக்கியுள்ளோம்.

அனைவருக்குமான இந்தியாவை நாம் உருவாக்குவது அவசியம் ஆகும்.

2013ல் குறைந்த வேகத்தில் கழிவறை கட்டப்படுவது, மின்மயமாக்கல் இருந்தன.

அதே வேகத்தில் பணிகள் தொடர்ந்திருந்தால் அதை முடிக்க பல தசாப்தம் தேவைப்பட்டிருக்கும்.

இந்தியர்கள் புதிய அரசை மட்டும் தேர்ந்தெடுக்கவில்லை, தேச கட்டுமானத்தில் மக்கள் பங்கு பெற்றுள்ளனர். ஜிஎஸ்டி வரி விதிப்புக்கு ஒத்துழைத்த வணிகர்களுக்கு எனது நன்றி. ஆபத்தான கட்டத்தில் இருந்த பொருளாதாரத்தை நாங்கள் மீட்டெடுத்துள்ளோம்.

புவி வெப்பமயமாதலை தடுப்பதில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கிறது.

வடகிழக்கு மாநிலங்களின் கடைகோடி பகுதியிலும் இந்த அரசு வளர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வளர்ச்சி என்பது அனைத்து கிராமங்களையும் சென்றடைய வேண்டும்.

சுய வேலைவாய்ப்பு திட்டத்தை ஊக்கப்படுத்தும் முத்ரா திட்டத்தில் 13 கோடி பேர் கடன் பெற்றுள்ளனர். இந்தியர்கள் வெளிநாடுகளுக்குச் சென்றாலும் அங்கு அவர்களுக்கு துணையாக உள்ளது மத்திய அரசு.

குக்கிராமங்களுக்கும் சாலை மற்றும் போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்தியுள்ளது. மீனவர்களுக்கு உதவும் வகையில் பிரத்யேக செயற்கைகோள் ஒன்று விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது என்றார் பிரதமர் மோடி

எழுதியவர் : (15-Aug-18, 8:32 am)
பார்வை : 75

சிறந்த கட்டுரைகள்

மேலே