முள்ளில் தொடங்கி மலர் என்று முடியும் வெண்பாக்கள்

'முள்'ளில் தொடங்கி 'மலர்' என்று முடியும் வெண்பாக்கள்

முள்ளாய் உறவினர் முன்னென் மனம்கிழித்தாய்
கள்ளமிலாக் காதலைக் கண்டிலனே! - உள்ளளவும்
ஓடாகத் தேய்ந்தே உருக்குலைந் தாலும்நான்
வாடா நெகிழி மலர்.

முள்ளிருந்து குத்திடினும் மொட்டவிழ்ந்த பூநாடித்
துள்ளலுடன் பொன்வண்டு சுற்றிவரும்! - கள்ளுண்ணும்
ஆசையுடன் ஆர்ப்பரித்(து) ஆடிவரும் அவ்வண்டை
வாசத்தா லீர்க்கும் மலர்.

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (15-Aug-18, 1:11 pm)
சேர்த்தது : Shyamala Rajasekar
பார்வை : 29

மேலே