சுதந்திர தினம் -----------கப்பலோட்டிய தமிழன்---------------------மலரும் நினைவலைகள் -----------படித்தது -----அனுபவங்கள்

எனக்கு மிகவும் பிடித்த நடிகர் திலகத்தின் கருப்பு வெள்ளை படங்களில் ஒன்று , பார்க்கும் பொது சிலிர்த்து விட்டேன் , அப்பப்பா என்ன ஒரு நடிப்பு , அதை balance செய்யும் விதத்தில் பந்தலு வின் இயக்கம் , தயாரிப்பு

நம்ம கோபால் சார் குறிப்பிட்டதை போலே இது ஒரு documentary டிராமா தான் , அதிலும் to be precisely the point இது ஒரு history , APN அவர்களின் படத்தில் போலே சிவன் இப்படி தான் இருப்பர் என்று ஒரு பிம்பம் மக்களிடம் இருக்கும் , ஆனால் VOC போன்ற தியாகிகளை மக்கள் நேராக கண்டு இருப்பார்கள் , அதனால் ஓவர் எக்ஷக்கெரடிஒன் க்கு வைப்பு இல்லை , இது நடிப்பு , மற்றும் இயக்கத்துக்கும் பொருந்தும்

இதுக்கு நிறைய மெனக்கெட்டு இருப்பார்கள் திரு பந்தலு மற்றும் சிவாஜி சாரும் , இந்த கூட்டணி கர்ணன் , வீரபாண்டிய கட்டபொம்மன் போன்ற biopic , mythology படங்களையும் , பலே பாண்டிய என்ற நகைச்சுவை படங்களையும் கொடுத்து ,மக்கள் மத்தியில் நல்லதொரு மதிப்பை பெற்று இருந்தார்கள் .

இந்த படம் வந்த ஆண்டு 1961 . நடிகர் திலகத்தின் 10 படங்கள் ரிலீஸ் செய்ய பட்டது. அவருக்கு details சேகரிக்க நேரம் எங்கு இருக்கும் , இந்த காலத்து நடிகர்கள் போலே வருசத்துக்கு 1-2 படங்கள் இல்லை , 10 படங்கள் , இருந்தாலும் அவர் references எடுத்து செயதார், எப்படி என்று அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம்

எப்படி சாத்தியம் , சிவாஜி ஒரு தேசியவாதியின் மகன் , சிறுவயது முதலே அவருக்கு தேசியமும் , தேசபக்தியும் இருந்தது எனவே இந்த வேடத்தை நன்றாக செய்ய முடிந்தது

படத்தின் நெலம் அந்த காலத்தில் 20-22 ரீல் அதாவது 3- 3.15 மணி நேரம் , இந்த 3 மணி நேரத்தில் ஒரு முழு மனிதனின் வாழ்கை வரலாற்றை விவரிக்க முடியுமா , சிரமம் தான் , சில cinematic liberties எடுத்து கொண்டு VOC யின் இளமை கால வாழ்வை overlook செய்து விட்டர்கள் என்று தான் சொல்ல வேண்டும் இன்னும் ஒரு 15 நிமிடம் படத்தின் நிலத்தை அதிகரிக்க செய்து கொஞ்சம் அதை காட்டி இருக்கலாம் .

என் போன்ற ஆட்கள் சினிமா பார்த்து , அதுக்கு அப்புறம் அது சம்பந்தமான புஸ்தகங்களை படிக்கும் போது தான் இவர்கள் இதை விட்டது தெரிந்தது

இதில் என்னை கவர்ந்த பாத்திரம் பாரதி , சுப்பையா பிச்சி உதறி இருப்பர் அதிலும் பறவைகள் அரிசியை உண்ணும் பொது அவர் கொடுக்கும் reaction டாப் . அது போலே ஜெமினி மற்றும் பலர் எல்லாம் வாழ்ந்து இருக்கார்கள்

இவர்கள் இப்படி வெளிப்படும் பொது நம்மவர் சும்மா இருப்பாரா ?
இளமையில் நாட்டு பற்று கொண்ட வக்கீல் , அதுவும் தன் தந்தையே வெல்ல ஆற்றல் உள்ள ஒருவர் , அதுக்கு அப்புறம் வீட்டில் அவர் காட்டும் பவ்யம் .

தொடர்ந்து தொழிலில் ஈடுபடாமல் போனதற்கு காரணம் சுகந்திர தாகம் .அங்கே அவர் பேசும் வசனம் sharp

தொடர்ந்து அவர் ஒரு கப்பல் கம்பெனி க்கு முயற்சி செய்வதும் , அதுக்கு வரும் முட்டுகட்டைகளை சமாளிப்பதும் , தடைகளை மீறி கப்பல் ஓடும் பொது அவர் முகம் ஒரு entrepreneur தன் முயற்சி வெற்றி அடையும் போது அடையும் உற்சாகம்

இதனால் அவர் சிறைக்குள் அடைக்கப்படும் போதும் , அவர் அனுபவிக்கும் கொடூர தண்டனை யும் உண்மையில் ரத்தம் வர வைக்கும் காட்சி

இனி நடிகர்திலகத்தின் பேட்டி இந்த படத்தைப் பற்றி

இது நடிகர்திலகத்துக்கு கிடைத்த பரிசு :

voc அவர்களின் மகன் " எனது தந்தையை பார்த்தது போலே இருக்கு என்று சொன்னது"
ஆனால் இந்த படம் முதல் ரிலீஸ் ல் வெற்றி அடைய வில்லை
ஆனால் பிற்பாடு நன்றாக மக்களை பொய் சேர்ந்தது
இன்றும் ஒரு iconic status கொண்ட படம்

--------------------------
கப்பலோட்டிய தமிழன் சிறப்பு செய்திகள்

* இந்திய அரசினால் வரி விலக்கு சலுகை அளிக்கப் பட்ட முதல் தமிழ்த் திரைப்படம்
* மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் கவிதைகளைத் திரைப்பாடல்களாகப் பயன்படுத்திய படம்
* முதல் வெளியீட்டில் தயாரிப்பாளருக்கு நஷ்டம் என்று சொல்லப் பட்டாலும், இலங்கையில் வெற்றி பெற்ற படம், கொழும்பு கிங்ஸ்லி மற்றும் யாழ் வின்சர் திரையரங்குகளில் 100 நாட்கள் ஓடியது. அது மட்டுமின்றி பின்னாட்களில் மறு வெளியீட்டில் திரையிட்ட இடங்களிலெல்லாம் மிகப் பெரிய வெற்றி பெற்று விநியோகஸ்தர்களுக்கு வசூலை வாரி வழங்கியது.

படத்தின் சென்ஸார் சர்டிபிகேட் காண்பிக்கப்பட்டபோது, Kappalottiya Thamizhan (Part Colour) என்று சர்ட்டிபிகேட்டில் இடம்பெற்றிருந்தது. "வெள்ளிப்பனி மலையின் மீதுலாவுவோம்" என்ற பாடல் மட்டும் கேவா கலரில் எடுக்கப்பட்டிருந்தது, ஆச்சரியமாக இருந்தது.

கப்பலோட்டிய தமிழன் குறித்த விமர்சனம் மிகவும் வித்தியாசமானது. இதுவரை ஜாலியாக அனுபவங்களைப் படித்த எனக்கு, கப்பலோட்டிய தமிழன் அனுபவம் மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக இருந்தது.

கப்பலோட்டிய தமிழனை கலரில் கண்டுகளித்த அனுபவங்களைப் படிக்கும்போதே மெய்சிலிர்க்கிறது.

படம் துவங்கியதும் ரொம்ப உணர்ச்சி மயமாகப்போனது. ஆரம்பத்தில் கைதட்டியதுதான். அதன்பிறகு கைதட்டலுக்கெல்லாம் வேலையில்லாமல் அனைவரும் படத்தோடு ஒன்றிப்போனார்கள். ஆனால் கலெக்டர் வின்ச் துரை (எஸ்.வி.ரங்காராவ்) யிடம் நடிகர்திலகம் பேசும்போது, வீரபாண்டிய கட்டபொம்மன் பெயரைக்குறிப்பிட, வின்ச்துரை அதிர்ச்சியுடன் சிதம்பரனாரைப் பார்க்கும்போது அங்கே வ.உ.சி. முகம் மறைந்து கட்டபொம்மன் தெரியுமிடத்தில் கைதட்டலால் தியேட்டரே அதிர்ந்தது.

வ.உ.சி. சிறைக்குச்செல்லும்போதே கண்களில் நீர்கட்டத்துவங்கி விட்டது. சிறையில் வழங்கப்படும் உணவின் வாடை தாங்காமல், அப்படியே வைத்து விட்டு, ஓட்டைவிழுந்த தகரக்குவளையிலிருந்து தண்ணீர் குடிக்க எடுக்கும்போது, தண்ணீர் முழுவதும் ஓடி, குவளை காலியாக இருக்கும் காட்சியில் கண்ணீர் வடியத்துவங்கியது. செக்கடியில் அவர் கழுத்தில் மாடுகளின் கழுத்தில் பிணைக்கும் சங்கிலியை மாட்டி, சிறைக்காவலன் அவரை அடித்து செக்கிழுக்கச்செய்ய, இவரும் கால்கள் தரையில் இழுபட செக்கிழுக்கும் காட்சியில் கேவிக்கேவி அழத்தொடங்கிவிட்டேன். என் கண்களில் இருந்து தாரை தாரையாய் கண்ணீர் கொட்டிக்கொண்டே இருக்கிறது. அந்தக்கண்ணீர் வ.உ.சி.யின் தியாகத்துக்கா, நடிகர்திலகத்தின் அர்ப்பணிப்புக்கா, பாரதத்தாயின் அடிமைத்தனத்தை நினைத்தா என்பது தெரியவில்லை. தியேட்டர் முழுவதும் கேவல்கள், விசும்பல்கள்.
(அன்றைய இளம்பிராயத்தில்தான் அப்படியென்றில்லை. இன்றைக்கும் கப்பலோட்டிய தமிழனைப் பார்க்கும்போதெல்லாம், நினைக்கும்போதெல்லாம், ஏன் இப்போது இந்த நேரத்திலும் அதே நிலைதான்).

எழுதியவர் : (15-Aug-18, 2:59 pm)
பார்வை : 74

சிறந்த கட்டுரைகள்

மேலே