Breaking News Live வாஜ்பாய் உடல் நிலை தொடர்ந்து கவலைக்கிடம்

டெல்லி:

முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல் நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாக எய்ம்ஸ் மருத்துவமனையின் அறிக்கை தெரிவித்துள்ளது.

முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய்க்கு சிறுநீரக கோளாறு காரணமாக கடந்த 9 வாரங்களாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.


இதையடுத்து பாஜக தனது நிகழ்ச்சிகள் அனைத்தையும் ரத்து செய்துள்ளது.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி எய்ம்ஸ் மருத்துவமனை வருகை

பிரதமர் மோடி, காங். தலைவர் ராகுல் காந்தி வருகையை தொடர்ந்து சோனியாவும் வருகை

கவலைக்கிடமாக உள்ள முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடல்நிலை குறித்து கேட்டறிந்தார் சோனியா

பாஜக தலைவர் அமித்ஷா எய்ம்ஸ் மருத்துவமனை வருகை

வாஜ்பாய் உடல்நலம் விசாரிக்க பிரதமர் மோடி எய்ம்ஸ் வருகை

லோக்சபா சபாநாயகர் சுமித்ரா மகாஜனும் எய்ம்ஸ் வருகை

வாஜ்பாய் நலம் பெற லக்னோவில் இஸ்லாமிய பள்ளி, மாணவ, மாணவிகள் பிரார்த்தனை

நாடு முழுக்க பாஜகவினர் சிறப்பு பிரார்த்தனை

குவாலியரில் அரசு ஆயுர்வேத கல்லூரி மாணவ, மாணவிகள் வாஜ்பாய் நலம் பெற பிரார்த்தனை செய்தனர்

வாழும் மகாத்மா வாஜ்பாய் கவலைக்கிடம் நெஞ்சை உலுக்குகிறது... தமிழிசை உருக்கம்


Posted By: Veera Kumar
Updated: Thursday, August 16, 2018, 16:03 [IST]

எழுதியவர் : (16-Aug-18, 5:02 pm)
பார்வை : 21

சிறந்த கட்டுரைகள்

மேலே