இயற்கை தாயே

இயற்கை தாயே...

உயிர்துளிகளாய் எங்களை இப்பூவில் பிறக்க செய்தவள் நீயே...

சகலமும் கொடையாக ஈந்து எங்கள் வாழ்வை நகர்த்துபவள் நீயே...

சுவாசிக்கும் காற்றை ஒருபோதும் தடைசெய்யாதவள் நீயே...

என் உடலின் இயக்கத்தை சீராக்கி இயக்குபவள் நீயே...

உண்ணும் உணவை மறுக்காமல் தருபவள் நீயே...

அருந்தும் நீரை அளவில்லாமல் சுரப்பவள் நீயே...

ஒவ்வொரு உயிருக்கும் உறைவிடம் மறுக்காதவள் நீயே...

அனுதின உணர்வுகளில் உற்சாகமாய் கலப்பவள் நீயே...

உன் அரவனைப்பை விட்டு அகலும் மனிதத்தை சீற்றம் கொள்ளாது காத்துக்கொள் தாயே...

எழுதியவர் : ஜான் (17-Aug-18, 5:25 am)
சேர்த்தது : ஜான்
Tanglish : iyarkai thaayaye
பார்வை : 408

மேலே