இயற்கையே சீறாதே

இயற்கையே சீறாதே...

நீரோடைகளின் தடயங்களை மறைத்ததால் வெள்ளம் வந்து நீதி கேட்கிறது....

காடுகளை வெட்டி வீழ்த்தியதால் வீடிழந்த மிருகஜீவன்கள் ஊருக்குள் வருகிறது....

மணல் அள்ளி கடத்தியதால் நீராதாரங்கள் மறைந்து விவசாய மரணம் நிகழ்கிறது....

இரசாயன உரமிடும் விஷம பழக்கத்தால் மண் மலடாகி விதைகள் வளர மறுக்கிறது...

இயற்கை ஆதாரங்களை அழித்த சுயநலம் பருவ மழையை மாற்றி அமைக்கிறது...

காற்று மாசுகளால் காரணமறியா நோய்கள் உற்பத்தி செய்யப்படுகிறது...

இயற்கையோடு இசைந்து வாழாமல், மீற முயல்கையில், சீறும் இயற்கை தன் பராக்கிரமத்தால் எச்சரிக்கை செய்கிறது...

எழுதியவர் : ஜான் (17-Aug-18, 5:41 am)
பார்வை : 445

மேலே