வரலாறு காணாத பேரழிவு உடையும் வீடுகள் வெள்ளத்தில் மக்கள் என்ன நடக்கிறது கேரளாவில் ------100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மோசமான வெள்ளம் 324 பேர் பலி உதவி கேட்கும் கேரள முதல்வர்

திருவனந்தபுரம்:

கேரளாவில் ஏற்பட்டுள்ள வெள்ளம் அம்மாநிலத்தையே மொத்தமாக சூறையாடியுள்ளது. அம்மாநில வரலாற்றில் இல்லாத பெரிய மழையை தற்போது சந்தித்து வருகிறது.

இடுக்கி, கோழிக்கோடு, கொச்சி தொடங்கி எல்லாம் மாவட்டங்களும் மொத்தமாக நீரில் மூழ்கி உள்ளது. மக்கள் சாப்பாடு, தங்க இடம் இல்லாமல் கஷ்டப்பட்டு வருகிறார்கள்.

கேரளா மாநிலம் முழுக்க தற்போது பலத்த மழை பெய்து வருகிறது. கடந்த மாதம் தொடங்கிய மழை விடாது அங்கே பெய்து வருகிறது.

கேரளாவில் உள்ள 26 அணைகளில் இருந்தும் கடலுக்கு நீர் திறந்து விடப்பட்டுள்ளது. ஆனாலும் அங்கு வெள்ளத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. இதுவரை மழை , வெள்ளத்தால் அங்கே 324 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

கேரளா மூழ்கி இருக்கும் காட்சி.

மழை மழை

இந்த மழை காரணமாக மண் சரிவு ஏற்பட்டுள்ளது. கண் முன்னே கட்டிடங்கள் இடிந்து விழும் நிகழ்வுகள் நடக்கிறது. மிக மோசமான வரலாற்று அழிவை அம்மாநிலம் தற்போது எதிர்கொண்டு உள்ளது.

ரெட் அலர்ட்

இதனால் ஏராளமான வீடுகள் தண்ணீரில் மூழ்கி உள்ளன. மக்கள் தங்கள் வீடுகளையும் உடைமைகளையும் இழந்து நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் அங்கு மீண்டும் மழை பெய்துவருவதால் 13 மாவட்டங்களில் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

ரயில் சேவை பாதிப்பு

கொச்சி விமான நிலையம் 26ஆம் தேதி வரை மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மெட்ரோ உட்பட கேரள மாநிலத்தில் ரயில் சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது.

100 ஆண்டுகளில் மோசமான பாதிப்பு

2,23,139 பேர் 1500க்கும் மேற்பட்ட முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மோசமான வெள்ள பாதிப்பை கேரளா சந்தித்திருப்பதாகவும் பினராயி விஜயன் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

கேரள முதல்வர் கோரிக்கை

உங்களின் உதவி பாதிப்பப்பட்டவர்களின் மீண்டும் நிலைப்படுத்தும் என்றும் முதல்வர் நிவாரண நிதிக்கு நிதியுதவி அளியுங்கள் என்றும் கேரளமுதல்வர் பினராயி விஜயன் கோரிக்கை விடுத்துள்ளார்.

எழுதியவர் : (18-Aug-18, 4:20 am)
பார்வை : 121

மேலே