சுதந்திரம்

சுதந்திரம்
====================================ருத்ரா

நமக்கு
ஒரு சுத்தியல்
கொடுத்தார்கள்.

நமக்கு
ஒரு சிற்றுளி
கொடுத்தார்கள்.

கைவிலங்குகளோடு
எல்லாம்
பெற்றுக்கொண்டோம்

அர்த்தம் தெரியாமல்
புகழ்பெற்ற சிற்பங்கள்
படைத்தோம்.

நமக்கு
சுதந்திரம் கொடுத்தார்கள்
அந்த சுத்தியல் வைத்து
சிற்பங்களை
அடித்து நொறுக்கினோம்
அதன்
அர்த்தம் தெரிந்து கொள்ள!

==========================================

எழுதியவர் : ருத்ரா (18-Aug-18, 5:26 pm)
சேர்த்தது : ருத்ரா
Tanglish : suthanthiram
பார்வை : 438

மேலே