சம்பா நீயொரு கிரேட் சுயசரிதை

தங்கம் போர்த்த தளிர் மேனியராய்
தக தகவென்று வாட்டசாட்டமாய் வளர்ந்து
வளைந்து நெளிந்து காற்றிலே அசையும் போது
வளர்த்தவனுக்கே பொறுக்கவில்லை
அறுக்க துணிந்து விட்டான் ,

நாங்கள் அங்கும் இங்கும் அசைந்து ஆடி
அலைக்கழித்தோம் முடியவில்லை எங்களால்
சரணடைந்தோம் அவன் அரிவாளுக்கு இரையாகி நிர்கதியானோம்
அவன் எண்ணம்நிறைவேற்ற அமைதிகொண்டோம் , எங்கள் கதிர்களை பிரித்து உடைத்தான்
எங்கள் தங்க போர்வையை உமியென்றும் ,
உள்ளிருந்த எங்கள் தளிர் மேனியை அரிசியென்றும்,
எங்களுக்கு சம்பா அரிசியென்றும் பெயர் சூட்டி தரம் உயர்த்தி
தரணியில் எம் பெயர் சொல்ல கொடுத்து வைத்தான் .

சம்பா என்றால் மக்கள் நாவில் சுவையும், மனதில் இனிமையும் ஊற்றெடுக்கும்
மக்கள் எம்மை தங்கள் முக்கிய உணவாக ஏற்றுக்கொள்ளும் போது
நாங்கள் அடையும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.
மனிதன் பசியாற நம்மை தந்த இறைவனுக்கு நாளும் பொழுதும்
நாங்கள் நன்றிக் கடன் பட்டிருக்கிறோம் .
மனிதன் வயிறார உண்டு மனம் குளிர காணும்போது
எங்களை நாங்களே மெச்சிக் கொள்கிறோம்.

சம்பா நீயொரு '' கிரேட்'' என்று எங்களை நாங்களே தட்டி கொடுக்கிறோம்
எங்களுக்கு நிகர் நாங்களே /எங்களை மிஞ்சிட எந்த தரமும் உலகில் இல்லை
அரிசியென்றால் சம்பா, சம்பா என்றால் ஆரோக்கியமும் செல்வமும் .

எழுதியவர் : பாத்திமாமலர் (23-Aug-18, 11:33 am)
சேர்த்தது : பாத்திமா மலர்
பார்வை : 651

மேலே