தொண்டு

தொண்டுகள் செய்திடப் பழகு –அதைத்
தொடர்ந்து செய்தால் அழகு
உண்டு கிடப்பது வீணு –எனும்
உணர்வு தன்னைப் பேணு !

தொண்டுகள் செய்தால் பாராட்டு –அது
தொடர்ந்திட தினமும் சீராட்டு
துண்டுகள் போட எண்ணாதே –பின்
தோல்வியைக் கண்டு துவழாதே !

துடிப்பவர் கண்டால் தூக்கிவிடும் –நல்
தொண்டினை என்றும் தொடர்ந்துவிடு.
விடியும் பொழுதைக் காட்டிடவே –தினம்
விடியும் வரையும் பொறுத்துவிடு !

நாட்டில் செய்யணும் தொண்டு –அதை
நாலு பேர்கள் கண்டு
நாட்டம் நெஞ்சில் கொண்டு –அதில்
விளையும் நன்மையை மொண்டு !

தொண்டு செய்தால் மேன்மை –அதைத்
தொடர்ந்தால் வந்திடும் பெருமை
தொண்டு செய்தால் இனிக்கும் –ஒரு
தீங்கு நினைத்தல் புளிக்கும்.

அடுத்தவர் வாழ எண்ணு –உன்
அன்பைப் புகழ்வார் கண்ணு
கெடுப்பவர் உள்ளமும் மாறும் –பின்
கேண்மைத் தன்மை ஊறும்.

எழுதியவர் : பொதிகை மு.செல்வராசன் (23-Aug-18, 5:32 pm)
Tanglish : thondu
பார்வை : 83

மேலே