படம் பார்த்து கவிதை சொல்
யாருக்காக இந்த தவம்?
இடுப்பு பிடிப்போ?
உயிர் விடுமுன்
கொட்டிய முடியை ஒரு தரம்
காண விரும்பி கவிழ்ந்தாயோ
கவரிமானே...?
கேரள செய்தி படித்து
நிலநடுக்கம் வருமென்று
அச்சமுற்று அடங்குகிறாயா?
அல்லது ஆசனமா...
கிஞ்சித்தும் தொப்பை
குறையாத 1மணி நேர
விளம்பரப்பெண் போல்
ஆனதென்ன அசடே...
நிமிர்ந்து நோக்கடி
உன் அன்பு முத்தத்தில்
பூமித்தாய் பூரித்து விட்டாள்.