நின் நினைவு பிரதிகள்

எப்படி எழுதுவது
தெறியவில்லை...
எல்லைகள்
தோன்றவில்லை
முதல் படியின்
ஆரம்பத்தை
ஆராய்ந்து
கொண்டிருக்கையில்
எல்லைகள் ஏது...?
ஓர் மாலை பொழுதில்
தேங்கி நின்ற
நீரில் அந்த
நிலவும் சூரியனும்
சேர்ந்தே தெறிகிறது
நீயும் தானடி
நான் மட்டும் வட்டத்தின்
வெளியில்....
பயணத்தில் பெய்திட்ட
மழையில் சன்னலோர
கம்பியில் வடிந்திடும்
துளிகளிலும்
நின் முகம்!
உன்னை மறந்திட
எதார்த்தத்தில்
ஐக்கியமாயிட
உள் சென்றேன்
ஓர் பூங்காவினுள்
ஒவ்வோர் மலரிலும்
முள்ளின் நுனியிலும்
நீயே நின்றாய்
அந்தோ! அது ஓர்
ரோஜா தோட்டம்...
இப்படி எங்கேங்கும்
நின் நினைவு பிரதிகள்
நீ சௌக்கியமா
பெண்ணே?
நானில்லாமல்....

எழுதியவர் : சுரேஷ் குமார் (26-Aug-18, 10:46 pm)
சேர்த்தது : சுரேஷ்குமார்
பார்வை : 327

மேலே