காகக் கூடு

முன்னுரை
ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் தொடங்கினாலே அதிகாலை முதல் மாலை வரை, குயில்களின் இனிமையான குயிலின் கூவல் ஓசை கேட்கத் தொடங்கும். இந்த இனிமையான ஓசை மே இறுதிவரை, தொடர்ந்து நகரம், கிராமம் என எல்லா இடங்களிலும் ஒலித்துக் கொண்டே இருக்கும். இந்த குயில்களின் இனிமைய்னா குரலை ரசிப்பவர்கள் பலருக்கும், அவை எதற்காக ஓயாமல் கூவுகின்றன, அதற்கான காரணம் என்னவாக இருக்கும் என்பது தெரியாது. அந்த இனிமையான கூவலுக்கு பின்னணியில் குயில்களின் இனப்பெருக்கதுக்கான போராட்டமே இருக்கிறது
காகங்களின் கூடுகளில் குயில்கள் முட்டையிடும் எலோருக்கும் தெரிந்த விசயம். யாது ஒருவர் வீட்டில் இனொருவர் அனுமதி இன்றி தானாக குடியிருப்பது போல் தான் . ஆனால், அதைச் செய்வதற்கு முன் எத்தனை கள்ளத்தனமான திட்டமிட்டு செயல் படுகிறது ,
காகங்கள் பின்பனிக் காலம் முடியும்போதும், முன்பனிக் காலம் தொடங்கும் போதும் குச்சிகளைச் சேகரித்து கூடுகளைக் கட்டவோ அல்லது பழைய கூடுகளைச் சீரமைக்கவோ தொடங்கும். இதை ஆண் குயில்கள் கவனிக்கத் தொடங்கும். பின்னர் காகங்கள் கூடு கட்டும் செய்தியை, பெண் குயில்களுக்கு ஓசை எழுப்பி இணை சேர அழைக்கும். இவ்வாறு இணை சேர அழைக்கும் ஓசை, இரண்டு மூன்று வகையில் ஒலிக்கும்.
ஆண் குயில்கள் சில வேளையில் ஒன்றுக்கு ஒன்று தேர்வு செய்யும் முன் ஆண் குயில்களுலாகு இடையே ஒரு இசை போட்டி நடக்கும். இறுதியல் போட்டியில் வெல்பவரை பெண் குயில் தேர்ந்து எடுக்கும். இது ஒரு வகை சுயம்வரம் என்றே சொல்லலாம் ஒரு ஆணும், பெண்ணும் இணை சேர்ந்தால் அந்த பருவத்துக்குள் அவை பிரியாது. இவை இரண்டும், அந்த பகுதியில் இருக்கும் காகங்கள், எப்போது முட்டையிடும் எனக் காத்திருக்கும் இரவல் வீட்டில் வாடகை செலுத்தாமல் இன விருத்தி செய்ய
காகங்கள் முதல் முட்டையிட்ட உடனே, குயில்கள் காகத்தின் கூடு களில் முட்டையை இட ஆரம்பிக் கும். காகத்தின் கூட்டுக்குச் சென்று முட்டையிட்டு வருவது அவ்வளவு எளிதல்ல. எனவே இவை இரண் டும் சேர்ந்து, காகத்தை ஏமாற்ற ஆண் குயில் முதலில் காகங்களின் கூடுகளுக்கு அருகில் சென்று அவற்றை வெறுப்படையச் செய் யும். கோபம் கொள்ளும் காக்கை கள் கூட்டை விட்டுக் கிளம்பி ஆண் குயிலைத் துரத்தத் தொடங்கும். அந்த நேரம் பெண் குயில் சத்தம் இல்லாமல் சென்று காகத்தின் முட்டைகளுடன் தனது முட்டை ஒன்றை இட்டு சென்றுவிடும்.
ஆனால், காகங்களால் முட்டைகளின் எண்ணிக்கையை கணக்கில் கொள்ள முடியும். எனவே அதற்கு சந்தேகம் வராமல் இருக்க பெண் குயில், காகத்தின் முட்டை ஒன்றை வெளியே தள்ளிவிட்டு, தன் முட்டையை இட்டு விடும். இப்படியே, அந்த பகுதியில் இருக் கும், ஒவ்வொரு காகத்தின் கூடுகளிலும் ஒரு முட்டையை இடும். இந்த கண்ணாமூச்சி ஆட்டத்தில் மாட்டிக்கொள்ளும் குயில்கள், காகங்களால் கடுமையாகத் தாக்கப்படும். இந்த
ஒரு வழியாக எல்லா முட்டைகளையும் குயில் இட்ட பின், தான் முட்டையிட்ட கூடுகளைக் கவனித்துக் கொண்டே இருக்கும். எந்தக் காகமாவது தன் முட்டையை அடை காக்காமல் தவிர்ப்பது தெரிந் தால், கள்ளத்தனமாய் போய் காகத் தின் கூடுகளைக் குயில்கள் கலைத்து விட்டு வந்துவிடும்
பொதுவாக, காகங்களின் முட்டைகளில் இருந்து குஞ்சுகள் வெளிவர பதினெட்டு நாட்கள் ஆகும். ஆனால், குயில்களின் முட்டையில் இருந்து குஞ்சுகள் பதினான்கு நாட்களில் வெளிவந்து விடும்.
எனவே கூட்டின் முதல் குஞ்சு என்ற உரிமையை நிலை நாட்டி உணவின் பெரும் பகுதி அதற்கே கிடைக்கும் வண்ணம் பார்த்துக் கொள்ளும். மேலும் பிறந்த ஒரு மாதத்துக்கு அது காகத்தைப் போலவே குரல் எழுப்பும். இந்த குரல் மாறும்போதுதான், காகங்கள் அதை கூட்டை விட்டு துரத்தும்.
இயற்கையில் நடககும் இந்த சம்பவத்தை வைத்துத் புனைவும் கலந்து எழுதிய உருவகக் கதை இது
****
வசந்த கால ஆரம்பம், கிராமத்தில் ஒரு சடைத்து 10 மீட்டர் உயரம் வளர்ந்த பூவரசமரம் . கிராமத்து சிறுவர்கள் அந்த மரத்தின் பூவரச இலையைக் கூம்புபோல் சுருட்டி கூர்ப்பகுதியில் கொஞ்சம் கிள்ளிவிட்டு அதில் வாய் வைத்து ஊதி பிப்பீ பிப்பீ பீ சத்தம் உருவாக்கி தம் இசை திறமையைக் காட்டி மகிழ்வர்

அந்த மரம் நிறைய மஞ்சள் பூக்கள். அம் மரத்தின் உச்சியில் ஒரு அழகான காகக் கூடு. காற்றில் மரம் அசைந்தாலும் காகக் கூடு மட்டும் நிரந்தரமாக அசையாது இருந்தது. அந்த கூட்டின் அமைப்பின் அழகில் இரு காகத் தம்பதிகளின் கைவண்ணமும் கட்டிடக் கலையும் தெரிந்தது. பல மரங்களுக்கு பறந்து சென்று தெரிந்தெடுத்த மரக் குச்சிகலால் இரு கிழமைகளில் கட்டிய கூடு. தங்களின் கூட்டில் அவர்களின் தாம்பத்திய உறவினால் பெண் காகம் இரு முட்டைகளை இட்டது. தமக்கு ஒரு ஆண் வாரிசும் ஒரு பெண் வாரிசும் கிடைக்கப் போகிறது என்று இண்டுக்கும் மகிழ்ச்சி. பிறந்தால் பெயர் வைக்கவும் முடிவு செய்தன . தங்களின் குல தெய்வம் சனிபகவானிடம் உங்களக்கு வாகனமாய் சேவை செய்வதால் ஒரு குறையும் இல்லாமல் எம்மை போல் அழகிய ஆணும் பெண்ணுமாக பிறக்க வேண்டும் என வேண்டி கொண்டார்கள்.
அடிக்கடி இருவரும் கலியாண வீட்டு வாசலில் வாழை இலைகளில் வீசி ஏறியப்பட்ட மிகுதி உணவை தெரு நாய்களோடு போட்டி போட்டபடியே தங்களின் நண்பர்களோடு பகிர்ந்து உண்ணும் பொது நபர்களிடம் தங்களுக்கு இரு வாரிசுகள் கிடைக்கப்போவதைப் பெருமையாக பேசிக்கொண்டனர்
கூடு திரும்பிய இரண்டுக்கும் ஒரு அதிசயம் காத்திருந்தது . அவர்கள் கட்டிய கூட்டில் மூன்று முட்டைகள் இருப்பதைக் கண்டது பெண்ண காகம் . சந்தேசத்தில் பெண் காகம் பல தடவைகள் முட்டைகளை எண்ணிப் பார்த்தது பின் அதுக்கு சந்தேகம் வந்தது. கணவனை பார்த்து அது கேட்டது
“ இது என்ன அதிசயம் . நான் இட்டது இரண்டு முட்டைகள். அதெப்படி மூன்றாக முடியும்?. அடிக்கடி உன் சின்னவீட்டுக்காரி எங்கள் வீட்டை தூரத்தில் இருந்து தன் குரலில் பாடியபடி அவதானிப்பதைப் பல தடவை கண்டேன். என் சினேகிதியும் தன் வீட்டைஅவதானித்தை கண்டதாக சொன்னாள். அந்தக் கள்ளி தன் குரலால் எப்படி உன்னை மயக்கி இருக்கிறாள்:”? பெண் காகம் கோபத்தோடு கேட்டது.
“ ஐயோ இல்லவே இல்லை :எங்கள் குல தெய்வத்தின் சனி பகவான் மேல் சத்தியம் . எங்கள் நிறத்தில் ஒருத்தி இந்த மரத்தில் ஒருந்து நல்ல குரலில் பாடி செல்வதை நானும் கண்டேன் அவளைப் பார்த்தல் எங்கள் சாதி இல்லை போல் தெரிகிறது. அதெப்படி அவள் என் சின்னவீடாக முடியும். நீ முட்டைகளை எண்ணுவது சரி இல்லை என்று எனக்குத் தெரியும். ஒருதடவை நாம் ஒரு கலியாண வீட்டு சாப்பாட்டை எங்களோடு பகிர வந்திருந்த நண்பர்களின் தொகை எவ்வளவு என்று உன்னிடம் கேட்ட பொது உன்னையும் , சேர்த்து எண்ணாமல் ஆறு என்று சொன்னாய் . எனக்கு உன் எண்ணிக்கையில் சந்தேகம். நாம் எண்ணியபோது உன்னையும் சேர்த்து எழு பேர். அது நினைவிருக்கிறதா? .அது போல் சில வேளை கூட்டில் இருந்த முட்டைகளை எண்ணுவதில் நீ பிழை விட்டிருக்கலாம். அள்ளது மூன்று முட்டை இட்டது உனக்கு நினைவு இல்லாமல் இருக்கலாம்.” என்றது ஆண் காகம்
இவர்கள் இருவரும் வாக்குவாதம் படுவதை பூவரசு மரக் கிளையொன்றில் இருந்து பார்த்து கொண்டிருந்த குயில் தனக்குள் சிரித்தது.
“ முட்டாள்கள். தங்கள் கூட்டை கட்டினால் மட்டும் போதாது அதை ஊடுருவலில் இருந்து பாதுகாக்கவும் தெரியவேண்டும் . திட்டம் போட்டு . கள்ளமாகப் போய் வேறு பறவைகளின் கூட்டில் முட்டை இடுவது என் கலாச்சாரம் கெட்டித்தனமும். . நான் அடைகாத்து குஞ்சு வெளிவரத் தேவையில். என் இனக் குஞ்சு முதலில் வந்து விடும்”. தன் மனதுக்குள் நினைத்துக் கொண்டது குயில் .
குயிலைக் கண்ட பெண் காகம் “குயிலே குயிலே நீ ஏன் நாங்கள் பேசுவதை ஒற்று கேட்கிறாய்?. நீ செய்வதை பார்த்தால் நாங்கள் இல்லாத நேரம் பார்த்து எங்கள் கூட்டில் மூன்றாம் முட்டையை ஈட்டு இருக்கிறாய் போல் எனக்குத் தெரிகிறது”
“அழகற்ற கருப்பு நிறக் காகமே உன்னை போல் திருட்டு குணம் எனக்கு இல்லை. நான் ஒரு பாடகி. என்னைவைத்து கவிகள் கவிதைகள் கூட எழுதி இருக்கிறார்கள் அது உனக்குத் தெரியுமா?. என் பெருமை பற்றி உனக்குத் தெரியாது .”
“என்னையும் வைத்து தான் கா கா பாட்டு உடுமலை நாராயண கவி உருவாக்கிய பிரபலமான பாடலை பராசக்தி படத்தில் ஒற்றுமையை மையமாக வைத்து பாடி இருக்கிறார் நடிகர் திலகம். “
“உனக்குத் தெரியாது . நான் குரல் கொடுத்தால் குழந்தைகள் கூட பதிலுக்கு குரல் கொடுக்கும்”
“அது என்ன பெரிய காரியம் .புரட்டாசி சனி விரதத்துக்குப் பின் சாப்பிட முன் எனக்கு சாப்பாடு வைக்க கா கா என்று என்னை தேடி அலைவதை நீ கணவில்லையா?. நான் சாப்பிட்டபின் தான் அவர்கள் சாப்பிடுவார்கள். உன்னை ஒருவரும் கூப்பிட மாட்டார்கள்”:
“மகாகவி பாரதியார் பற்றி கேள்வி பட்டிருகிறாயா?. அவர் கூட குயில் பாட்டு பாடி இருக்கிறார். என் பெயரை அடிப்படையாக வைத்து சினிமா நடிகைகள் பாடத் தெரியாவிட்டாலும் குயிலி என்று பெயர் வைத்திருகிறார்கள் .
“காகம் சிரித்தபடி நீ உன்னை பற்றிப் பெருமையாகப் பேசினாலும், ஒரு தெய்வத்துக்கும் நீ வாகனம் இல்லையே. நீ நாயிலும் கேவலம்.”
“நீ என்ன சொல்லுகிறாய்”?:
:”நான் சனி பகவானுக்கு வாகனம். நாய் வைரவருக்கு வாகனம். நீயோ ஒருவருக்கும் வாகனம் இல்லை. அதனால் மக்கள் எங்கள் சாதிக்கு மதிப்பு கொடுக்கிறார்கள்
“ஏய் நீ சரியாக ஏமாறக்கூடிய பேர்வழி. காகமும் நரியும் கதை உனக்கு தெரியும் தானே. .நரி உன்னை ஏமாற்றி நீ வைத்திருந்த வடையை எடுத்துக் கொண்படு பொய் விட்டது . அவ்வளவுக்கு நீ ஒரு இளிச்சவாயன்” குயில் சொன்னது
“தெரியும் அதே நேரம் இலங்கைக் காகம் வடையை கால்களின் கீழ் வைத்து கா கா என்று பாடி நரியை எமாற்றிய கதையும் தெரியும்:” என்றது ஆண் காகம்.
“என் நேரத்தை உன்னோடு பேசி வீண் அடிக்காமல் வேறு கூடு தேடி நானும் என் துணைவியும் போகவேண்டும். உன் கூட்டை குஞ்சுகள் பொரித்து வெளியே வரும் வரை பாதுகாத்துக் கொள். நான் வாறேன் அவை வெளியே வந்தும் நான் வந்து பார்க்கிறேன் என்று சொல்லி குயில் பறந்து போயிற்று.
****
மூன்று நாட்களின் பின் இரு முட்டைகள் மட்டு கூட்டில் இருந்ததை ஆண் காகம் கண்டு: பெண் காகத்தைப் பார்த்து “எடியே அந்த மூன்றாம் முட்டைக்கு என்ன நடந்தது”?
“அதோ பாருங்கள் அந்த சிறுவனை. அவன் இந்த மரத்தில் ஏறி நாம் இல்லாத போது ஒரு முட்டையை திருடிவிட்டான். அது நாம் இட்ட முட்டை இல்லை என் நினைக்கிறேன் ”
“அதெப்படி உனக்குத் தெரியும் “?
“:இன்னும் 18 நாட்கள் பொறுங்கள் வெளியே குஞ்சுகள் வெளியே வரும் போது அது போடும் குரலில் இருந்து அவை எங்கள் வாரிசுகளா இல்லையா ஏன்று தெரியும்”
“அது நாள் முடிவு” என்றது ஆண் காகம்
இரு கிழமைகளில் குஞ்சுகள் முட்டைகளில் இருந்து வெளியே வந்தன . இரண்டும் கருமை நிறம். அதோடு கா கா அவவைற்றின் குரல் ஒலித்தது.
“ பார்த்தியலா இவை இரண்டும் எங்கள் வாரிசுகள். நாங்கள் ஆசை பட்டது போல் ஒன்று ஆண் மற்றது பெண் . எங்கள் சந்தேகம் தெளிந்தது” : என்றது பெண் காகம்.
”இனி நீ முட்டை போட்டபின் சரியாக கணக்கு வைத்து இரு. நான் அந்த குயிலின் மேல் ஒரு கண் வைத்திருக்கிறேன் “
மரத்தின் அருகில் இருந்த தேனீர் கடையில் இருந்து
“காக்கைச் சிறகினிலே நந்தலாலா—நின்றன்
கரிய நிறம் தோன்றுதையா நந்தலாலா” என்ற பாரதியார் பாடல்
காற்றில் தவழ்ந்து வந்தது
****
(யாவும் புனைவு)
உசாத்துணை: (மதுரை திருமங்கலத்தைச் சேர்ந்த பறவை ஆர்வலர் ரவீந்திரன் நடராஜன்)

எழுதியவர் : பொன் குலேன்திரன் கனடா (27-Aug-18, 1:06 am)
Tanglish : kaakak koodu
பார்வை : 570

மேலே