என்ன தவம் செய்தனை

உன் சிரிப்பில் தெரியும் சிங்கப்பல்
பாவனையில் மலையருவி.
உன் நிழலில் குளிருற்ற முல்லையும்
நாணத்தில் சிகப்புற்றது.
உன் வெகுளியின் கதகதப்பில்
ஞானம் தூளியாடும்.
உன் புன்னகைத்தீவில்
மின்மினி தேவதைகள் .
ஓய்வற்று சரசரக்கும் புடவையில்
மொய்க்கும் கண்களெல்லாம்
கார்த்திகை தீபக்குமிழ்.
கிள்ளிப்போட்ட கொலுசொலியில்
பூமிக்கும் புல்லரிக்கும்.
உன் சொடுக்கொலியில்
உயிர் கிளரும் பட்டமரம்.
உன் துயிலில் தேர்வெழுதும்
புத்தனின் தியானங்கள்.
உன் வார்த்தைகள்
ஸ்வரங்களின் மந்திரம்.
உன் ஈரமூச்சில் லயனமாகும்
வரமெல்லாம் காதலாகி.
வானம்தான் பேசியதோ
என் பெயரை நீ சொன்னதும்?
நந்திக்கு சேதி சொல்ல
நீ தளிர்த்த அந்தியும் மாம்பழம்.
நம்மை நீ
சந்திக்குமந்த நொடியிலும்
முட்டிப்பிதற்றும் ரகசியங்கள்.

எழுதியவர் : ஸ்பரிசன் (29-Aug-18, 7:01 pm)
சேர்த்தது : ஸ்பரிசன்
பார்வை : 114

மேலே