மோன நிலை

மேகத்தின் தவம் களைய
மண் வேண்டிக்கொண்டதை
வேடிக்கையாக கருதவில்லை காற்று !
இதற்கு சமிக்கை எசமான்
இடியும் மின்னலும் கையசைக்க
தரையிலே பாரத மேனகை தோகைவிரிக்கிறாள்
தடம் பதித்து தன் மனம் குளிர....
மேகத்தின் மோகம் ஆவிமேல் லயிக்க
பூலோக கற்பவதி புலம்புகிறாள்
ஆடை நழுவக்கண்டு
கடமை தவறா கதிரவனோ
கார் மேக வள்ளலுக்கு
மறு சுழற்சியின் தர்மத் தாயேன புகழாரம் சூட்ட
இயற்கை பெருமிதம் படவில்லை !
இது தெளிந்து வகுக்கப்பட்ட அறிவியல் அதிசியமாம்....
ஏன் இந்த மௌனம் ?
கேள்வி கேட்க ஆசையா..!
மழை பொழிய வானவில் தோன்றவில்லையா !
மழை வருமுன் இடி இடிப்பதை கேட்டதில்லையா !
மின்னலைத்தான் பார்த்ததில்லையா !
பதில் வேண்டுமா .....
தோன்றி மறைவதற்கு
கேளும் உன் கதிரவனை.....
மேக ராசாவின் மோன நிலையை யாதென்று அறிய !
இது என்ன ...
இப்பிறவி போதாது
எதற்கு இயற்கை ?
எது உன்னை ஈன்றது என்று நீ அறிய !

எழுதியவர் : (29-Aug-18, 9:33 pm)
பார்வை : 54

மேலே