மறுமணம் -1

மறுமணம் -1
இரு குடும்பங்கள் இணைகின்ற நிகழ்வு திருமணம். அந்த திருமணம் முடிவுற்றால் இரு சொந்தங்களும் பிரிந்து விடும். நமது கதையினை பற்றி பார்ப்போம்..
திருமண மண்டபத்தில் கார் உள்ளே நுழைந்தது. கார் வரவேற்பு வாசலின் அருகே நின்றது. காரில் இளம் வயதுள்ள வாலிபன் (ராஜேஷ்) மற்றும் 46 வயதுள்ள இளம் வாலிபனின் தாயாரும் (பார்வதி) இறங்கினார்கள்.
பார்வதி: போலாம்
திருமண மண்டபப்படியில் ஏறி வாசலில் நின்றனர். வாசலில் மணப்பெண் தந்தையார் வரவேற்றுக் கொண்டிருந்தார்.
பார்வதி : வணக்கம் அண்ணேஇஎப்படி இருக்கிங்க?
ம.தந்தையார் : ரொம்ப நல்லாருக்கோம்.
ராஜேஷ் : என்னை ஆசீர்வாதம் பண்ணுங்க
ம.தந்தையார் : நல்லாயிருப்பா
பார்வதி : உங்க பொண்ணோட கல்யாணத்துக்கு என வாழ்த்துக்கள்
ம.தந்தையார் : ரொம்ப நன்றிங்க. சரி உள்ளே வாங்க!
(உள்ளே சென்றதும்) வாங்க! வாங்க இப்படி உட்காருங்க
பார்வதி; : அட என்னண்ணே இது இந்த வீட்டு பொம்பளைங்க யாரையுமே காணாமே..! வெளி வேலை எல்லாம் நாங்க பார்த்துக்குறோம்னு உங்கள வீட்டுலயே விட்டுட்டு போய்ட்டாங்களா ?
ம.தந்தையார் :(சிரித்துக்கொண்டே) நல்லா கேட்டீங்க போங்க..அப்படி இருந்தா தான் நல்லாயிருக்குமே..நானும் இந்த வீட்டுல சந்தோஷமா இருப்பேன்…
(பார்வதி சிரித்தாள்)
ம.தந்தையார் : மேல எல்லாம் கூட்டம் கூடி பாட்டு பாடிக்கிட்டு இருக்காங்க…
பார்வதி : ஒ..அப்ப நான் தான் லேட்டா வந்துருக்கேன்.
ம.தந்தையார் : ஆமா அப்படித்தான்
பார்வதி : சரி..சரி..நான் உடனே மேல போறேன்
ம.தந்தையார் : சரி சீக்கிரம் போங்க..

கைகளோடு வளையல் ஆட
கால்களோடு கொலுசு சிணுங்க
கண்கள் நடனம் புரிய
அனைவரும் பார்வை மயங்க (பார்வதியும் பார்த்தாள்)
தென்றல் வரும் தேடி வரும்…
திருமண தேதி கூடி வரும்..
என்ற பாட்டுக்கு ஒரு பெண் (ராகிணி) நடனம் ஆடினாள்.
அனைவரும் சந்தோஷத்தில் திளைத்தனர்.
கூட்டத்தில் ஒருத்தி : என்ன லேகா உன் பொன்னு ராகிணி எல்லா விஷ்யத்துலயும் நம்பர் ஒன்னா இருக்கா...என் கண்ணே பட்டுடும் போல இருக்கு. நான் மட்டும் இல்ல இங்க இருக்கிறவங்க எல்லார் கண்ணுமே அவ மேல தான் கண்ணு இருக்கு..

(லேகா ராகிணியைப் பார்த்தாள்... ராகிணி சிரித்துப்பேசிக் கொண்டிருந்தாள். பார்வதி அவளைப் பார்த்து பேச ஆவலுடன் வந்தாள்.அதற்குள் ஒரு பெண் வழி மறித்து பேசிக் கொண்டிருந்தாள். பார்வதியும் வேறு வழியின்றி பேசினாள். ஒரு பெண் (சுவேதா) ராகிணியின் காதில் ஏதோ சொல்லிவிட்டு சென்றாள். ராகிணியும் நகர்ந்தாள். பார்வதி அவளை பார்த்தாள். அங்கு காணவில்லை. பார்வதி அந்த பெண்ணிடம் )
பார்வதி: ஒரு நிமிஷம் ...
பார்வதி : (சுவேதா) இங்க பாருங்க
சுவேதா : ஆ...
பார்வதி : உன்கிட்ட ஒன்னு கேட்கணும். இங்க ஒரு பொண்ணு டேன்ஸ் ஆடிட்டு இருந்துச்சு. அந்த பொண்ணு எங்க போச்சுனு தெரியல..
சுவேதா : யாரு ராகிணி அக்காவா அவங்க சமையற்கட்டுக்கு போயிருக்காங்க.

எழுதியவர் : நிவேதா (30-Aug-18, 10:41 am)
சேர்த்தது : நிவேதா
பார்வை : 676

மேலே