இதுவும் கானா அதுவும் கானா

ஏன்டா அய்யன், உன் மனைவிக்கு ரட்டைக் கொழந்தை பொறந்திருக்குதுன்னு கேள்விப்பட்டேன். அதான் கொழந்தைங்களப் பாத்துட்டு தாமரை கிட்டயும் பேசிட்டுப் போலாம்னு வந்தேன்.

அதோ அங்க பாருங்க பாட்டிம்மா அங்க கட்டில்ல ரண்டு கொழந்தைங்களும் படுத்துட்டு இருக்குதுங்க.

அடடா, அழகு சொக்குதுடா. கொழந்தைங்களுக்கு என்ன பேருங்கள வச்சிருக்கிற?

(கை நீட்டிக் காட்டி)
அதுவும் கானா. இதுவும் கானா.

என்னடா சொல்லற அய்யன்?

ரண்டு கானாவுக்கும் தனித்தனி அர்த்தம் பாட்டிம்மா.

அதென்னடா அப்பிடி அதிய அர்த்தம்?

தழிழர் வழக்கப்படி ரண்டுக்கும் இந்திப் பேருங்களத் தான் வச்சிருக்கிறோம்.

அதச் சொல்லுடா அய்யன்.

உலகத்தில யாரு பெத்த ரண்டு பிள்ளைங்களுக்கும் ஒரே பேர வைக்கமாட்டாங்க. இந்தப் பேரு கின்னஸ் புத்தகத்திலே பதிவாகப் போகுது. உலகம் பூரா எல்லா ஊடகங்களிலும் எங்க ரட்டை கொழந்தைங்க, தாமரை, நானும் செய்தியாகப் போறோம். எங்க நிழல் படங்களையும் வெளியிடப் போறாங்க.

ரொம்ப சந்தோசம்டா அய்யன். ஒரே பேரோட ரண்டு அர்த்தங்களையும் சொல்லுடா.

சொல்லறேன். ஒரு 'கானா'வுக்கு 'அணு' ன்னு அர்த்தம். இன்னொரு 'கானா'வுக்கு 'காடு' ன்னு அர்த்தம்.

எழுதியவர் : (30-Aug-18, 9:16 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 210

மேலே