நானும் காடும்

நானும் காடும்

நாற்பதடி நடந்தபிறகு
திரும்பிப்பார்த்தேன்
என்கால்தடங்கள் இன்னும்
கலையாமல் அப்படியே
ஆம்
இங்கு வேறு மனிதர்கள் இல்லை

அங்கே என்ன சப்தம் எதோ
விலங்கினம் போலெ
கண்டிப்பாக மனிதன் இல்லை
இருந்திருந்தால்
என் கால் தடங்கல் அப்போதே
கலைக்க பட்டிருக்கும்

மீண்டும் ஒரு மெல்லிய சத்தம்
மழையோ -இல்லையில்லை
உதிர்ந்த இலைச்சருகுகள்
மண்தொட வருகிறது
அதானே மழைத்துளிகள்
மண்தொட மரங்கள்
இடம் வைக்கவில்லையே
விழுங்கள்
இங்கேதான் நீங்கள்
உங்கள் உறவுகொடிக்கும்
பூமித்தாய்க்கும் இடையில்
பயணம் செய்யமுடியும்
நகரத்தில் நாங்கள்
உங்களை பொருக்கி
அடுப்பெரித்து விடுவோம்

அதெங்கே கண்ணாடி தட்டு
இல்லையில்லை
நீரோடை
நீரோடை என்றால்
ஓடிக்கொண்டல்லவா இருக்கும்
மாறாக நீ தூங்கிக்கொண்டு இருக்கிறாய்
எந்த சலனமும் இல்லாமல்
உன் தண்ணீர் தேகத்திற்குள்
கால் ஆயுதம் விட்டு கலங்கடிக்க
இங்கு மனிதர்கள் இல்லையோ

இதென்ன பவளம்
இவ்வளவு பெரிதாய்
இல்லையில்லை மலை குன்று
எப்படி நீமட்டும் இத்தனை அழகு
எம் கிராமங்களில்
உன் தேகங்களை குண்டுவைத்தல்லவா
தகர்ப்பார்கள்
உன் மேனிகளில் அங்கங்கு
இரத்தமில்லா காயங்கள் தானே
நான் கண்டதுண்டு
ஓ உன்னுடம்பை
வெட்டியெடுத்து சந்தை செய்யும்
விந்தை மனிதர்கள் இங்கு இல்லை
ஆகையால் தான் நீ எத்துணை அழகு

ஓ இதென்ன
மரங்கள் மறைந்த
ஒரு மயான வெட்டவெளி
எப்படி சாத்தியம்
இப்பெரும் காட்டிற்குள்
ஒரு மிருகம் சொன்னது
சத்தம் போடாதே
சற்று தூரத்தில்தான்
மனிதர்கள் வசிக்கிறார்கள்

எழுதியவர் : இளவல் (31-Aug-18, 4:57 pm)
Tanglish : naanum kaatum
பார்வை : 216

மேலே