வைப்புத் தொகை

வேடனின் விமோட்சன விடியலுக்கு
தலைசாயா அம்பு
கண்டெடுத்த கடவுச்சொல்
" விதி "
இன்று
மக்களாட்சி பொம்மலாட்ட பெருந்தொகை மௌனம் சாதிக்க
ஒட்டக் கூத்தன் உரைப்பது..
உறுதியாச்சு எப்பொழுதும் எங்கள் ஆட்சி
எடு படாது இனி
வெத்து வேட்டு எதிர்கட்சி
புரட்சிக்கு இடமில்லை
புரிந்துகொண்டால் புகழாரம்..
அதை விட்டு விட்டு விவேக வீதிக்கு வந்துவிட்டால்
ஜலதோச வைப்புத்தொகை விருந்தளிக்கும்
" கண்ணீர் புகை ''
உள் நாட்டு சட்டம் அரவணைக்க
சதுரங்க நாற்காலி எடுத்தாளும்
நாட்டு நடப்பு சதித்திட்டம் !

எழுதியவர் : (31-Aug-18, 8:23 pm)
பார்வை : 29

மேலே