தளர்ந்து விடும்

உருமாறிய கலசம் கண்டது
வயதிற்கு இலக்கணம்
ஒருமித்த தலைக் கவசம்
வெளிர் சுன்னம் படர்ந்திருக்க
வீசிய காற்றில் சிறு அலையாய் காணவே
சதிராடியது வாயடைத்த கருமைக்கோடு
எஞ்சியதோ சற்றே பழுத்திடும் பஞ்சு போல....
ஏனோ இன்று...
முன்பின் தப்பித்த பற்கள் நாட்டியமாட
சொல்லாட்சிக்கு சோதனை
நடையுடை தளர்ந்து விட
திண்னைக்கு ஊன்றுகோல் ஒன்று
காத்திருக்கு துணைபோக ...
தெருவோர பைரவர் முறைக்க
தெளிவுபடுத்தியது கை கண்ட கோல்...
பதின்ம வயது பெருமிதம்
கண்டு கொண்டது ஒப்பற்ற உண்மை
நிமிர்ந்து இனி நடக்கா வயது
ஏற்றது மூப்பூ ....
தைரியம் பிடிக்கிறது அபிநயம்...
வணங்கா முடி மண்டியிட...

எழுதியவர் : (1-Sep-18, 10:40 pm)
Tanglish : thalarnthu vidum
பார்வை : 30

மேலே