வெட்டிப் பயல்

விதைக்கு விவரம் கூற...
விழுதுகள் தவம் ஏற்கிறது ....
வயோதிகம் வாய்ப்பிலக்க
இயற்கை தேவையறிந்து
வம்சத்தை வளர்கிறது .
வருங்காலம் வருத்தப்பட வேண்டாமென்று !

வெட்டிப் பயல்..
வாலெடுத்து
வேரை வெட்டவே
எச்சம் சிந்தி மானம் காக்க....
பலப் பரிட்சை நடத்துகிறது ...
திறன் கெட்டு ,
தரங் கெட்டு ,
தரித்திரம் , சரித்திரம் படைக்கிறது
தமிழ்த் தாய் பரிதவிக்க....

பெற்ற பிள்ளை
பெரும் புள்ளி
உத்திரவாத உறுதி மொழியை
வேண்டியவார் சூடிக்கொள்ள
சத்திய பிரமான காற்சட்டை
சிறைச் சாலை கம்பி
நேர்க்காணலுக்கு நாள் குறிக்கிறது !

எழுதியவர் : (1-Sep-18, 11:41 pm)
பார்வை : 45

மேலே