ஏக்கம்

பிறந்த நாளன்று
தாய் நலனுக்கு தவம் ஏற்க
ஆறாய் ஓடுகிறது
கண்ணீர் ஆனந்தமாய்......

சேய் செய்கை சிவஞான யோகம்
சிரசு குளிர்ந்து சிந்தை தெளிய
சீர்மிகு சிந்து பைரவி தாலம் ஏற்க
என்னம்மா என்று வினவ....
ஏக்கம் அம்மா என்றது காண் !
கண்ணம்மா வியக்க
பாரதி புகழ்வது
பாரத தாயல்லவோ !
வந்தே மாதிரம் என்றோர்
வாழ்ந்தே வந்தாரெனில்
பாரத மாதா கேட்பது .........
பராசக்தியை வேண்டியபடி
கானி நிலம் கிட்டியதா ?
தென்னை தான் உள்ளதா ?
பாஞ்சாலை புண்ணகை சிந்தியதால்
குரங்கும் குயிலும்
பெரும் திட்டம் தீட்டவில்லை..
நாளோன்று போவதற்கு......
இன்று ....
பாரதம் பறக்கிறது
காகித காசுவிற்கு
கல்ல நோட்டு
கல்லரையில் சாட்சி சொல்லி
கல் வெட்டிற்கு கதை சொல்கிறது !

எழுதியவர் : (3-Sep-18, 9:48 pm)
Tanglish : aekkam
பார்வை : 49

மேலே