காலச் சக்கரம்

கை பிடித்து நடக்க கற்றுக்கொடுக்க
சிறு குழந்தை நிலை நிறுத்தியது
கிழ வயது நெடுந்தூரமில்லை என ....

காலச் சக்கரம் கண்ணியமாக
கண்ணுக்கு தெரிவது போல்
நகர்கிறது நிம்மதியாக
கட்டுக் கோப்போடு
பெருமூச்சு விட்டு !

ஆடல் பாடல் எல்லாம்
அடங்கிப் போகும் ..
இயற்கை கடைக்கண் பட..
இதனாலே
அகிம்சை யோகி
அமைதி காக்கிறான் ஆசை துறந்து !
ஆளாய் பறப்பவன்
வாரி இறைக்கிறான் புளுகளை நா தழும்பேற !

ஆசை பேராசை கயிறு திரிக்க
கஞ்சத்தனம் பட்டிமன்றம் காணுது ...
எதை கொண்டு வந்தாய்
நீ கொண்டு செல்வதற்கு ...என
பாடம் புகட்டும் ஆசான் ஒப்பிக்க
திரைமறை பந்துக்கள் வேண்டுவது
திருத்திய கீதாச் சாரம் !

எழுதியவர் : (3-Sep-18, 11:20 pm)
Tanglish : kaalach chakkaram
பார்வை : 44

மேலே