ஆசிரியர்களுக்காக

உளி தீண்டா கற்ப்பாறையாய்
மாணவர்கள்,
அவர்களை உளி எடுத்து
உரு கொடுத்து
சிற்பம் என வடிக்கும்
நடமாடும் தெய்வங்களே
ஆசிரியர்கள்...!!!

சிறகுகள் இல்லை என்றாலும்
சீறி எழுந்திடலாம்
சிகரம் என்ன சிகரம்
விண்ணை கூட
தாண்டி விடலாம்,
நம் வாழ்வு நலம் வாழ
நாள்தோறும் பணி நாடும்
ஆசிரியர்கள் இருக்கும் வரை...!!

ஓர் ஆசிரியரின்
சின்ன சின்ன கண்டிப்பும்
சிக்கனமான புன்னகையும்
சிதறாத சிந்தனையும்
மாணவர்களின் வாழ்வை
சிறப்பாக நெறிபடுத்துகின்றன..!!!

ஆன்ணா ஆவன்ணா
எடுத்துதுரைக்க
ஓர் ஆசான் இல்லாது
இருந்திருந்தால்
கவியரசு கண்ணதாசனும்
கைநாட்டு கண்ணதாசன் தான்..!!!

மாணவ மணிகளை மேடையிலேற்றி
எதிர்கால மேதைகளாக்கி
அழகு பார்க்கும் ஆசிரியர்களே!
மாணவர்கள் வாழ்வில்
மங்காத ஒளி என்றால்
அது என்றுமே
நீங்கள் தான்.....!!!

காகிதத்தை புரட்டியும்
அனுபவத்தை திரட்டியும்
இணையத்தில் தேடியும்
இமைகளை வறுத்தியும்
மாணவர்களுக்கு கல்வி புகட்டும்
ஆசிரியர்களே!
நாங்களும் உங்களை
அச்சடித்துவிட்டோம்
காகிதத்தில் அல்ல
எங்களின் இதயத்தில்....!!!

அகிலத்தை அழிக்குமாம்
அக்னிப்பிழம்பொளி
அகிலமே போற்றுமாம்
அறிவுச்சுடரொளி
அவ் அறிவினை
விதைக்கும் விவசாயி
ஆசிரியர்கள் எனும்
எழுத்தாணி...!!

எட்டி பறிக்க முடியாத கனியை
ஏணி மீது ஏறி பறிக்கலாம்
தொட்டு பிடிக்க முடியாத காற்றை
தொண்டைப் பையில் அடைக்கலாம்
தொலைதூர நிலவை
கவிஞன் பாட்டுக்குள் அடக்கலாம்
விழித்த பின்னும் இமை தேய
சொப்பனங்கள் காணலாம்
கரை தீண்டும் அலைகள்
மீண்டும் கடல் சென்று சேரலாம்
திசை அறியாத போதும்
பாதை நூறு வகுக்கலாம்
ஆசிரியர்கள் இல்லாத
ஓர் உலகை
கருப்புள்ளி என்றே
அழைக்கலாம்....!!!

புவி ஈர்ப்பு விசை இல்லை என்றால்
மழைத்துளிகள் கூட
மண்ணிற்க்கு சொந்தமில்லை
காற்று வந்து தீண்டாவிட்டால்
புல்லாங்குழல் இசைப்பதில்லை
மரத்தின் இலைகள் உதிர்ந்துவிட்டால்
நிழல்கள் அங்கு சிரிப்பதில்லை
கடிகாரம் பழுதாகிவிட்டால்
காலம் அது நிற்ப்பதில்லை
கண்களை மூடிக்கொண்டால்
உலகமே இல்லை என்று
அர்த்தமில்லை
அதைப்போலத்தான்
ஆசிரியர்கள் இல்லை என்றால்
கல்வி நம் கற்பனைக்குக் கூட
சொந்தமில்லை...!!

கடவுள், மனிதர்களை
நல்வழிப்படுத்த விரும்பினாராம்
ஒவ்வொரு ஆசிரியரின்
உருவிலும் உள்ளத்திலும்
இருந்து கொண்டு....!!!

அன்பிற்க்குறிய ஆசிரியர்களே!
நாங்கள் படித்து வாங்கும்
பட்டங்கள் யாவுமே
உங்களின் பாதங்களுக்கு தான்
சமர்ப்பணம் .....!!!
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

எழுதியவர் : கவிமலர் யோகேஸ்வரி (5-Sep-18, 5:18 pm)
பார்வை : 286

மேலே