செல்ல மகள்

என்
கைகள்
அவள் மெய்யை
தழுவ
அவள்
முன்னந்தலை
என்
நெஞ்சினில் பதிய
விடும்
அனல் மூச்சு
காற்று
என்னையும்
தாலாட்ட
ஆழ்ந்த
உறக்கத்தில்
தன்னிலை மறந்து
அவளுடன்...


என்ன தவம்
செய்தோமோ
இந்த
சின்னஞ்சிறு
தேவதையை
பெறுவதற்கு..
இந்த
மழலை
மொழி பேச
மனதை வருடிடுமே
இதை
சொல்ல
வார்த்தை
இல்லை
உணர்வுகள் மட்டுமே...

தத்தி தத்தி
நடந்து வந்த
சின்ன
அவள் பாதம்
இன்னும்
என்
நெஞ்சை விட்டு
மீளவிவ்லை...


அன்னையின்
கருவறையில்
முன்னொரு
காலத்தில் இப்படித்தான்
இருந்தோமா
என எண்ணிட தோணுது
என் சின்னஞ்சிறு
மகளின்
அணைப்பினிலே...!

பெண் குழந்தை
பெற்றிட
பெருந்தவம்
செய்தோமா
முன்னொரு
ஜென்மத்தில்
தன்னலம் கருதாத அன்னையாக
இருந்தவளை
சீராட்டி
பாராட்ட
வாய்ப்பு ஒன்று
வந்தது என்று...!!!

எழுதியவர் : த பசுபதி (6-Sep-18, 11:23 am)
சேர்த்தது : பசுபதி
Tanglish : sella magal
பார்வை : 361

மேலே