பயணிப்பவனின் கவிதை

பயணிப்பவனின் கவிதை

இது

சபிக்கப்பட்டவர்கள் வாழும் மனிதர்களின் கூடாரம்
சேர்ந்து வாழ தெரியாதவிலங்குகளின் அரங்கம்
தனக்கென வாழும் தான்தோன்றிகளின் வசிப்பிடம் இதில்
மனிதம் செத்து பன்னூறு ஆண்டுகள் ஆகிறது

அன்பை புதைத்து அதன் மேல் அரசோச்சும் விலங்குகளே !
அடுக்கி வைத்த பணக்கட்டுகளா உங்கள் பின் வரபோகிறது
கட்டிவைத்த மாளிகைகளா உங்கள் சவத்தோடு வரபோகிறது
கால் காசுக்கும் பெறாத அரைஞான் கயிறும் உனக்கு உரித்தல்ல

மரிக்கும் போது வரும் ஞானம் உங்கள் உயிர்ப்பின் போது
எங்கே போனது ?
விரித்து வையுங்கள் இதயங்களை அன்பில் நனைய வையுங்கள்
வாழ் நாட்களை
உங்கள் மரணத்திற்கும் ஓர் பொருள் இருக்கும்
உங்கள் மரணத்திற்கும் பின்னும் அழ விழிகள் சில இருக்கும்
அந்த அழுகையில் ஆழ்ந்த அன்பிருக்கும்

எழுதியவர் : ச ரவிச்சந்திரன் (9-Sep-18, 2:40 pm)
சேர்த்தது : ச இரவிச்சந்திரன்
பார்வை : 150

மேலே