இயற்கையில் நான் கண்ட காட்சிகள் 1

முன்னுரை : ஐம்பூதங்களை உள்ளடக்கி மனிதனுக்கு இறைவன் தந்த வரப்பிரசாதம் இயற்கை. இயற்கையின் சில அடிப்படைக் கொள்கைகள் இயற்கையின் இயல்பைப் பற்றிக் கூறுகின்றன. இந்த வழியில் இயற்கையின் அங்கங்கள் மனிதனுக்கு பாடம் புகட்டுகிறது

நான் வட மாகணத்தில் உள்ள வவுனியா மாவட்டதில் அமைந்த குருமண்காடு என்ற கிராமத்தில் பிறந்தவன். எனக்கு என் பெற்றோர் வன்னிராசன் என்று பெயர் சூட்டி ராசன் என்று செல்லமாக அழைத்தனர். இக் கிராமம் வவுனியாவில் இருந்து மன்னாருக்குப் போகும் A30 பெரும் பாதையில் 6 கி மீ தூரத்தில் உள்ளது இக் கிராமத்தைச் சுற்றி உள்ள குளங்களில் பாவற்குளம் மிகப் பெரிய குளம் . அக்குளத்தை சுற்றிலும் காடு.

எனக்கு வசதி இருந்ததால் வவுனியா மத்திய கல்லுரியில் படித்து கொழும்பு பல்கலைகழகத்தில் தவரஇயலில் பட்டம் பெற்றவன். என்னோடு படித்த கண்டியைச் சேர்ந்த குணசெகார (குணா) என்ற சிங்கள மாணவன் விலங்கியலில் பட்டம்பெற்றவன் . இருவரும் பல்கலைகழக அறிவியல் மாணவர் சங்கத்தின் செயற்குழுவில் அங்கத்தினர்கள், அதனால் நண்பர்கலானோம். எங்கள் சந்திப்புக்கு முக்கிய காரணம் நாங்கள் இருவரும் இயற்கை விரும்பிகள். தாவர இயலும், விலங்கியலும் இயற்கையில் முக்கிய பங்கு வகிக்கின்றன. என்பதையும் இயற்கையில் புதைந்துள்ள இரகசியங்களையும் அதோடு மனித வாழ்வுடன் உள்ள தொடர்பினை கண்டு பிடிப்பதே எமது இருவரின் நோக்கம், ஆகவே இரகசியங்களின் சிறப்பைப் பற்றி நாம் இருவரும் ஆராய்ச்சியில் ஈடுபட்டோம். . அதோடு மட்டுமல்ல எமக்கிடையே இன்னொரு ஒற்றுமையும் இருந்தது . எனது தாய் மல்லிகா பதவியாவை சேர்ந்த சிங்களப் பெண். என் தந்தை முருகையா ஒரு வன்னித் தமிழன். அவர் பிறந்தது வவுனியாவில். என் தந்தையும், தாயும் ஆசிரியர்கள். வவுனியாவில் ஓரே கல்லூரியில் படிப்பித்த போது, சந்தித்து, காதலித்து, திருமணம் செய்தவர்கள்.
என்னைப்போல் குணசெகராவின் தாய் சுமனாவதி கண்டியைச் சேர்ந்த சிங்களத்தி. தந்தை இராமசாமி மாத்தளையை சேர்ந்த மலை நாட்டுத் தமிழர் . அவர் அப்போதிக்கரியாக கடுகஸ்தொட வைத்தியசாலையில் வேலை செய்த போது நேர்ஸ் சுமனாவை சந்தித்து ,காதலித்து. திருமணம் செய்தவர் . ஆகவே எனக்கும் குணாவுக்கும் மூன்று மொழிகளும் சரளமாக பேச வரும். இருவரும் இருவரின் இனத்தையும் இந்து, புத்த மதங்களை மதித்தோம்.

எனது வேண்டுகோளை ஏற்று வன்னியின் இயற்கை காட்சிகளைப் பார்த்து, ரசித்து ,அவை மனித வாழ்வோடு இணைந்தது என்பதை ஆராய என்னோடு வவுனியாவுக்கு குணா வந்தான் . எனது தந்தை வன்னியில் துனுக்காய், மாங்குளம் , ஒட்டுசுட்டான் , முல்லைத்தீவு கிளிநொச்சி ஆகிய இடங்களில் ஆசிரியராக வேலை செய்ததால் வன்னியில் உள்ள கிராமங்களில் உள்ள குளங்களுக்கு வெளி நாட்டில் இருந்து சில காலம் வருகை தரும் பறவைகள் பற்றி அறிந்து வைத்திருந்தார் . அவரும் ஒரு இயற்கை விரும்பி .

மழை காலத்தில் மட்டும் பெருக்கெடுத்து ஓடி குளங்களை நிறப்பும் பாலி. அருவி, அக்கராயன் போன்ற ஆறுகளைப் பற்றியும், காட்டு மூலிகைகள், மலர்கள் . பழங்கள் பற்றி அறிந்து வைத்திருந்தார் என் கிராமத்தில் உள்ள பாவற்குளம் விவசாயத்துக்கு பெரிதும் உதவும் குளமாகும்

சிறு வன பூங்காக்களில் வாழும். சிறுத்தைகள், நரிகள் கரடிகள் யானைகள், பாம்பு வகைகள் காட்டுச் சேவல்கள் நிறைந்தது வன்னிக் காடு. விவசாயம் வன்னி மக்களின் முக்கிய தொழில். தம்மை யானைகளிடம் இருந்தும், பாம்புகளிடம் இருந்து, காப்பாற்ற பல வன்னிக் கிராமங்களில் கணபதி , நாகதம்பிரான், காட்டு வைரவர் கோவில்கள் இருகின்றன . வருடா வருடம் அக் கோவில்களுக்கு விவசாயிகள் பொங்கிப் படைப்பார்கள் .

****
நானும் குணாவும் எமது வன்னிக் காட்டு பயணத்தை தற் பாதுகாப்புக்கு கையில் அனுமதி பெற்ற என் தந்தையின் துவக்குடன் நடந்து சென்ற போது இருவரும் முதலில் பாவற்குளத்தில் கண்ட காட்சி ஒரு அழகிய நிற நீண்ட கால்களைக் கொண்ட வெள்ளை நிற நாரை. அது தன் ஒரு காலை மடக்கி மறு காலில் நின்று தவம் புரிந்து கொண்டு நின்ற காட்சி என்னை கவர்ந்தது. உடனே எனது புகைப்பட கருவியால் படம் எடுத்தேன். என்ன நடக்கப் போகுது என்று சில நிமிடங்கள் நின்று பார்த்தோம் . யானையின் பிளிறல் சத்தத்தில் கொக்கு அசையவில்லை.

“ அதோ பார் “ஓடு மீன் ஓட உறுமீன் வரும் அளவும் வாடி இருக்குமாம் கொக்கு.
என்று ஔவையார் சொன்னது என நினைவுக்கு வருகிறது” என்றேன் நான் .
“அதன் அர்த்தம் என்ன ராசன”?
“பொறுமை பெரிது என்பதாகும் . சரியான் சந்தர்ப்பம் வரும் வரை அவசரப்படாமல் அமைதியாக காத்திரு என்பதை அந்தப் பறவை அந்த செயல் மூலம் எமக்கு சொல்லுகிறது . திருவள்ளுவரும் அதை வேறு விதமாக சொல்லுகிறார்”
““அவர் என்ன சொல்லுகிறார் ராசன் “ ?
“கொக்கொக்கக் காத்திரு!
அதன் குத்து ஒக்கச் செயலை முடித்திடு:”
என்கிறார் வள்ளுவர்
“நீ சொல்வது ஏனக்கு புரியவில்லையே ராசன் “
துள்ளி ஓடிடும் சிறு மீன்கள், கரையில் உள்ள கொக்கு கண்ணற்றது, செயல் திறனற்றது என்றுதான் எண்ணிக் கொண்டிருக்கிறோம் , ஏன்? கொக்கு, தான் ஆடாமல் அசையாமல் உட்கார்ந்திருக்கிறதே அதனால்.

இத்தனை மீன்கள் துள்ளி ஓடின, கொக்கு ஏதும் செய்திடவில்லை, இனி நமக்கென்ன பயம் என்று எண்ணிக் கிளம்புகிறது, பெரிய மீன்! என்ன ஆகிறது? கொக்கு கொத்திக் கொள்கிறது! கொக்கு அங்கே வெகு நேரம் காத்திருந்து இருந்தது அதற்குத்தானே?

இரைதேடிக் காத்திருப்பதும், கிடைத்ததும் பற்றிக் கொள்வதும் கொக்குக்கு மட்டும்தானா இயல்பு; மற்றப் பலவற்றினுக்கும் உண்டுதானே ! ஏன் கொக்கினை மட்டும் குறிப்பாகக் காட்டுகிறார் வாக்குண்டாம் பாடிய ஔவையார் என்று கேட்கத் தோன்றுகிறதா? காரணத்தோடுதான், காட்டியிருக்கிறார்.

புலிகூட இரை தேடிக் காத்திருக்கிறது, பதுங்கிக் கொள்ளக் கூடச் செய்கிறது.
வல்லூறு கூடப் புறாவைத் தேடி வட்டமிடுகிறது.
ஆனால், பதுங்கி இருந்திடும் புலி, மானைக் கண்டதும் பாய்கிறது, மான் ஓடுகிறது, புலி துரத்துகிறது, பல மைல்கள் கூட அலுப்பு மேலிட ஓடி ஓடி வேட்டையாடிய பிறகே மானைக் கொல்ல முடிகிறது புலியினால்; ஒரு போராட்டம் நடைபெறுகிறது.

வல்லூறு பாய்ந்து வருவது கண்ட புறா தப்பித்துக் கொள்ளப்படும் பாடு, கொஞ்சமல்ல. கொக்கு மீனைக் கொத்துவது அவ்விதமல்ல! என்ன நடக்கப் போகிறது என்று தெரியாமல் மீன் துள்ளி வருகிறது. கொக்கு அதைக் கொத்தப் போக, மீன் தப்பித்து ஓட, கொக்கு விடாமல் துரத்திச் சென்று கொத்திடும் முறை இல்லை. மீன் வருவதும் கொக்கு கொத்துவதும், மீன் சிக்கிக் கொள்வதும் உடனே இரையாகிவிடுவதும் எல்லாம் கண் மூடிக் கண் திறப்பதற்குள். மீன் வருவதற்கும், மீன் சிக்குவதற்கும் உள்ளே இரையாகிச் செல்லுவதற்கும், இடைவெளிகளே இல்லை; எல்லாம் ஒரே நேரத்தில் நடைபெற்று விடுகிறது. அதனால்தான் கொக் கொக்கக் கொத்திட வேண்டும் என்றார். பாம்பு கூட, ஓசைப்படாமல் தீண்டிவிடுகிறது. ஆளை வேட்டையாடிக் கடிப்பதில்லை. ஆனால், மனிதனைத் தீண்டித் தீர்த்துக் கட்டுமேயன்றித் தின்பதில்லை. கொக்கு தீண்டித் தீனியாக்கிக் கொள்கிறது மீனை. அவ்வளவு கூர்மையான பார்வை. அத்தனை நேர்த்தியான குறிபார்த்திடும் திறன், அவ்வளவு வேகமான கொத்தும் தன்மை, கொக்குக்கு! அத்தனை திறமையாக இரை தேடிக் கொண்ட கொக்கு, புலிபோல உறுமுவதில்லை, இரத்தம் குடித்த மகிழ்ச்சியில் புலி படுத்துப் புரள்கிறதே, அதுபோலவும் இல்லை, ஏதும் அறியாததுபோல, எப்போதும் போல இருக்கிறது கொக்கு, காரியத்தைக் கச்சிதமாக முடித்துக் கொண்டு! இவற்றினை எல்லாம் எண்ணிப் பார்த்துத்தான் வள்ளுவர், "கொக்கொக்க' என்று கூறினார்” என்றேன் நான்
: ராசன் அந்த வானத்தை பார் . குளத்தை நாடி முக்கோண வடிவில் பறநது வரும் வாத்து இனதின் அழகைப் பார் எத்தனை ஒழுங்கை கடை பிடிக்கிறது அவை கூட அறிவில் பாடம் நமக்கு புகட்டுகிறது” குணா சொன்னான்
“அதனால் அதோ அந்தப் பறவை போல வாழ வேண்டும்” எனக் கவிஞர் கண்ணதாசன் இயற்றிய சினிமாப் பாடல் இன்றும் எமது காதுகளில் ஒலித்துக்கொண்டிருக்கிறது. சுதந்திரமாய், தமது விருப்பத்திற்கேற்ப கூட்டமாகவும,; ஒற்றுமையாகவும் வானில் பறந்து, குடிவரவு, மொழி, பாதுகாப்பு போன்ற கட்டுப்பாடுகளின்;றி, தேசம் விட்டுத் தேசம் செல்லும் பறவைகளைப் போல மனிதன் வாழ நினைப்பதில் தவறில்லை. அந்த நிலை மனிதனுக்கு வருமா என்பது சந்தேகம். பொருளாதார, அரசியல் காரணத்தால் நாடுகளுக்கிடையே பயணக் கட்டுப்பாடுகள் மனிதனால் உருவாக்கப்பட்டவையே. தன் சொந்த நாட்டுக்குள்ளும் ஒரு ஊரில் இருந்து இன்னொரு ஊருக்குப் போவதற்கும் பாதுகாப்பு வலையம் என்ற பெயரில் தடைகளுண்டு. இத்தகைய தடைகளுக்கு அப்பாற்பட்டவை மற்றைய ஜீவராசிகள். அதிலும் பறவைகள் தாம் நினைத்த மாதிரி எங்கு வேண்டுமென்றாலும் பறந்து செல்லக் கூடியவை. அதன் மேல் பொறாமைப் பட்டோ என்னவோ துப்பாக்கி ஏந்தி தமது ஊருக்கு விருந்தாளிகளாக வரும் அப்பறவைகளை மனிதன் வேட்டையாடி மகிழ்கிறான். பறவைகள் போன்று மொனாக் (Monac) என்ற இனத்தைச சேர்ந்த வர்ணத்துப் பூச்சிகள், மற்றும் தத்துக்கிளிகள் கூட வட ஆபிரிக்காவில், வெகு தூரம் பாலைவனத்தினூடாக பயணம் செய்கின்றன. மொனாக் வர்ணத்துப் பூச்சிகள், பெரும் கூட்டமாக வட அமெரிக்கா, தென் கனடா பகுதியிலிருந்து சுமார் 3000 மைல்கள் வாரக்கணக்கில் பறந்து சென்று மெக்சிக்கோ, கலிபோர்னியா போன்ற இடங்களை அடைகி;ன்றன. சில வேளைகளில் திசை மாறி அட்லான்டிக் சமுத்திரத்தையும் கடந்து ஐரோப்பாவை அடைகிறது என்றால் சிலர் நம்புவதற்கு தயங்குவார்கள். இவ்வாறே தண்ணீரும் உணவும் தேடி, ஆபிரிக்காவில் வன விலங்குகள் கூட்டமாக இடம் பெயர்கி;ன்றன. அதனால் ஆறுகளைக் கடக்கும் போது சக்தி குறைந்த விலங்குகள் பல பலியாகின்றன. அதுவுமல்லாமல் சக்தியிழந்து மேலும் பயணத்தைக் கூட்டத்துடன் தொடரமுடியாமல் வேறு விலங்குகளுக்கு இரையாகின்றன.
“ முக்கோண வடிவத்தில் பறந்து வருகிறது வாத்துகள் நாம் சொல்வது போல் வாத்து மடையர்கள் அல்ல அவை அந்த வடிவமைப்பின் மூலம் காற்றின் எதிர்பை எதிர்த்து பயணம் செய்கிறது. இறைவன் அவைக்கு கற்றுக் கொடுத் பாடம். அதில் இருந்து அறிவியல் கற்று விமானம் படைதான் மனிதன் இன்னும் எவ்வளவோ பறவைகளில் இருந்து மனிதன் கற்க வேண்டியிருக்கு. முக்கியமாக எடுத்த காரியத்தை ஓய்வின்றி செயல்பட்டு .. செய்து முடிக்க வேணும் என்ற உறுதியை அந்த பறவைகள் எமக்கு எடுத்து சொல்கிறது குணா”
“அங்கே பார் அந்த மரத்தில் தொங்கும் தூக்கணாம் குருவிக் கூட்டை அதன் கட்டிடக் கலைத் திறன் பிரமாதம். நாம் வீட்டுக்கு அத்திவாரம் போடுவது போல் அது கூட்டை கட்டும்போது ஆரம்பத்தில் தாவர நூல்கலாள் அவிழாத முடிச்சு போடுகிறது . இதை பார்த்து வீடு கட்ட நிலம் இல்லாவிட்டால் . மரத்தில் வீடு கட்டி வன பூங்காவில் இருப்பது போல் வாழலாம் அல்லவா”? ராசன் சொன்னான்
“ஊஞ்சல் போல் குஞ்சுகளுக்கு கூட்டை உருவாக்கிக் கொடுத்து இருக்கிறது குருவிகள் . தன் குரலால் தாலாட்டும் படுகிறது. எந்த வேகமாக வீசும் காற்றிலும் தொங்கும் கூடு பாதிப்டைவதில்லை என்ன வினோதம் ராசன்” குணா சொன்னான்
“என் கிராமத்தில் சில பெண்கள் மரத்தில் சேலையை ஏனையாக கட்டி அதில் குழந்தையை போட்டு தாலாட்டு பாடுவது எனக்கு நினிவுக்கு வருகிறது . அது தாய் பாசத்தின் எடுத்துக் காட்டு குணா.”
”அங்கேபார் ராசன் அந்த காகக் கூட்டை. அதில் முட்டைடுவது காகம் போல் கருப்பு பறவை அல்லவே:” குணா ராசனைக் கேட்டான்.
“ காகத்தின் கூட்டில் அது இல்லாத நேரம் முட்டை இடுவது குயில். இது எம் சமூகத்தில் நடக்கும் சம்பவங்களில் ஓன்று. காலியாக இருக்கும் வீட்டுக்குள் அனுமதி இன்றி போய் இருந்து இலவசமாக வாழ்வது சிலர் பழக்கம் காலப்போக்கில் இருந்த வீட்டுக்கு சொந்தம் கொண்டாடுவார்கள். மனிதன் அதை குயிலில் இருந்து கற்றான் போலும்”
“சரி வா நாம் மேலே நடப்போம் காட்டில் என்ந நடகிறது என்று பார்ப்போம் அதென்ன டோக் டோக் என்ற சத்தம் அந்த மரத்தில் இருந்து கேட்கிறதே. யாரவது தச்சன் வேலை செய்கிறானா”?

:”இல்லை அது மரம் கொத்தி பறவை கருங்காலி மரத்தில் தச்ச வேலையை செய்கிறது. :
“. இந்த காட்டில் கருங்காலி மரம் உண்டா ?. அது அதிகம் விலை பெறுமதியான மரமாச்சே அது”
“இந்த கருங்காலி மரத்தில் இருந்து பெறப்படும் பலகைகளை, கருங்காலி பலகை என்பர். இவை மிகவும் பெறுமதிமிக்க பலகை வகையாகும். இப்பலகை கருப்பு நிறம் கொண்டவை. நூற்றாண்டுகளாக இரும்பை ஒத்த உறுதியுடன் கூடிய பலகைகள் இம்மரத்தில் இருந்து பெறப்படுகின்றன. குறிப்பாக இந்த மரத்தின் நடுப்பாகமான கருமை நிறம் கொண்டப் பகுதியை வைரம் என்பர். அநேகமாக கருங்காலி மரத்தில் இருந்தே "உலக்கை" செய்யப்படுகிறது. சில இடங்களில் கருங்காலி அல்லாத பலகைகளில் இருந்து உலக்கை செய்யப்பட்டாலும், கருங்காலி உலக்கைகளுக்கான பெறுமதியை மற்றையப் பலகைகள் பெறுவதில்லை.
“சரி .ராசன் இந்த மரத்துக்கும் இனத்துக்கு துரோகம் செய்தவனை இனத்தின் கருங்காலி என்பதுக்கும் என்ன தொடர்பு: ராசன் ?
“நல்ல கேள்வி குணா. மரம் வெட்டும் கோடரியின் கைப்பிடியாக கருங்காலி மரத்தை பாவிப்பார்கள் , காரணம் அது உறுதியானது. ஒன்றாக இருந்து தம் இனத்துக்கு துரோகம் செய்பவனை கருங்காலி என்பர். . காரணம் கருங்காலி மரம் மற்றைய மரங்களை வெட்டும் கோடரிக்கு கைபிடியாக இருந்து உதவுவதால் இனத் துரோகிக்கு இனத்தின் கருங்காலி என்பர்” ராசன் விளக்கம் கொடுந்தான் .
“அந்த மரத்துக்கு கேட்ட பெயர் வந்தாலும் விலை மதிக்க முடியத மரம் கருங்காலி. அதன் பட்டை, பிசின், வேர் அதிக மருத்துவப் பயன் கொண்டவை. துவர்ப்புத் தன்மை மிக்கது. நீரிழிவு நோய், பெருவயிறு, வயிற்றுப்புழு நோய் ரத்தக் குறைவால் உருவாகும் திமிர் வாதம், பெருநோய், அழல் குன்மம் போன்றவை நீங்கும் கொழுப்பை குறைக்கும்”.
கருங்காலி வேரை எடுத்து சுத்தப்படுத்தி நீரில் ஊறவைக்க வேண்டும். பின்பு அந்த நீரைக் கொதிக்க வைத்து வடிகட்டி அருந்தினால் வயிற்றுப்புண் ஆறும். வயிற்றில் உள்ள கொழுப்பைக் குறைக்கும். வயிற்றில் உள்ள பூச்சிகளை வெளியேற்றும் கிருமி நாசினியாகவும் செயல்படுகிறது.

இரத்தத்தில் இரும்புச்சத்தை அதிகரிக்கும். பித்தத்தைக் குறைக்கும். நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் இருவேளை இதைக் குடித்து வந்தால் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறையும்.” குணா சொன்னான்
“ சர்க்கரை வியாதி உள்ள என் தந்தைக்கு அவசியம் இந்த கருங்காலி மூலிகை மருந்தைக் கொடுக்க வேண்டும் குணானக்கு தான் இந்த பறவைகள் பற்றி அதிகம் தெரியுமே, என்இந்த பறவை இப்படி அதிசயமாந முறையில் நடக்கிறது :””? ராசன் கேட்டான்
: அதுதமன் இயற்றக்யின் இரகசியம் இயற்கையில் உள்ளவை மானிட உலகைப் போன்று ஒன்றுக்கு ஓன்று உதவுகிறது மரப் படைகளை கொத்தும் ஒலியும் மரணகளை துவாரம் செய்யும் உருவாகும் ஒலியும் சில கூவும் குயில்கள் எழுப்பும் ஒலியை போல் இனச்சேர்க்கைகு அழைப்பு ஆகும் பூச்சிகளை கொன்று உண்டு மரம் கொத்தி பறவை வைத்தியம் செய்து மரத்தின் ஆயுளை நீடிக்கிறது.. அதாவது டாக்டர் வேலை பார்க்கிறது” :
“ எவ்வளவு காலமாக இந்த டாக்டர் வேலையை செய்கிறது இந்தப் பறவை”?
“ இவை பல ஆயிரம் ஆணடுகளுக்கு முன் தோன்றியவை:
:”அதோ பார் பக்கத்தில் உள்ள மரத்தில் வளரும் இன்னொரு குருவிச்சசை செடியை “
“ அந்த செடி. ஒரு மனிதனை போல் இன்னொரு உயிரை அண்டி வாழ்கிறது” .:
“இதை ஒட்டுண்ணி செடி என்பர். குருவிகள் விட்ட எச்சத்தில் உள்ள விதைகளில் இருந்து வளருவது குருவிச்சசை செடி . இது மரத்தின் சத்தில் பங்கு எடுக்கிறது .. அதனால் குருவிச்சை என்ற பெயர் பெற்றது. இதுவும் மனித உடலில் உள்ள வைரஸ் போன்றது தூத்துமக் கொத்தான் என்ற ஒட்டுண்ணியை ஆங்கிலத்தில் கஸ்குட்டா (Dodder). இது இதன் நுகரியிலிருந்து உணவையும் நீரையும், கனியுப்பையும் எடுத்துக்கொள்கின்றது.”. அடேயப்பா இயற்கையின் விசித்திரம் தான் என்ன .”?
(தொடரும்)
*****

எழுதியவர் : Pon Kulendiren (11-Sep-18, 4:05 am)
பார்வை : 909

மேலே