பிறக்கும் முன்னே இருந்த உள்ளம் இன்று வந்ததடா இறந்த பின்னே வரும் அமைதி வந்து விட்டதடா

பிறக்கும் முன்னே இருந்த உள்ளம்
இறந்த பின்னே வரும் அமைதி
கவிஞரின் இந்த வைர வரிகள்
வாழ்க்கைத் தத்துவத்தின் உச்சம்

பிறப்பிற்கு முன் ஏது உள்ளம்
இறப்பிற்கு பின் எதை யார் அறிவார்
பின் ஏன் சொன்னார் கவிஞர்
உட்பொருள் ஏதும் உண்டோ

சலனமில்லா உள்ளம்
எது நடந்தாலும் அமைதி
என்று வாழ்ந்து பாரும்
என்று சொல்கின்றாரோ

நடைமுறைக்கு ஒத்து வரும்
நல்ல பழக்க வழக்கம்
அழகாக எடுத்துச் சொன்னால்
அதில் ஒரு அர்த்தம் இருக்கும்

அவசர வாழ்க்கை தன்னில்
யோசிக்க மறுக்கும் உள்ளம்
மன உளைச்சலாலே
அமைதியை இழக்கும் நெஞ்சம்

இக்கட்டான வாழ்வில்
இனிமை வேண்டி தவிக்கும்
இதமான உள்ளம் அதில்
இறைவன் அமர வேண்டும்

என் சொல் கேட்கும் மனது
என் கட்டளை ஏற்கும் அறிவு
என் இஷ்டப்படி வாழ்க்கை
ஏன் அமையவில்லை

என்று எங்கும் மானிடர்
புவிதனில் எங்கும் உண்டு
பிறப்பைக் கொடுத்த அவனே
முடிவினில் நம் பக்கம் இருப்பான்

ஆனந்த வாழ்க்கை வாழ
ஆத்மார்த்த உள்ளம் வேண்டும்
அதை நிலையாக நாமும் பெறவே
இக்கவிதையின் முதல் நான்கு வரிகளை மீண்டும் படிப்பீராக

எழுதியவர் : ஆனந்த் சுப்ரமணியம் (11-Sep-18, 8:33 am)
பார்வை : 316

மேலே