நீயின்றி சுகமில்ல

வீராப்பா சுத்தின பயபுள்ள..
நீறூத்தா பொங்கி நான் துள்ள..
சிறகொடிஞ்சு வீழ்ந்தேனே மண்ணுக்குள்ள..!

எனக்கேதும் குறையில்ல..
விளையாட்டு சிறுபிள்ள..
ஆனேனே கைபிள்ள, காலம் செல்ல செல்ல..!

உயிர்நாடி இங்கில்ல..
இதுபோல இருந்ததில்ல..
மனசொடிஞ்சு கிடந்தேனே மெல்ல மெல்ல..!

காத்து கண்ணுக்கு தெரிவதில்ல..
காதல் மனசுக்கு மருந்துமில்ல..
தூரம் இருந்துங்கூட நாம வேறில்ல..!

உன தவிர நெனபில்ல..
உன் கை, என் கைக்குள்ள..
இருந்தாலே போதும் வாழ்வேன் புள்ள..!

என்னான்னு நான் சொல்ல..
நீயின்றி சுகமில்ல..
இருட்டோடு உறவாடி காலம் தள்ள..
இதுகூட பரவால்ல..
என்கூட யாருமில்ல..
எதுக்காக என் வாழ்க்கை விளங்கவில்ல..

ஆகாசம் பெருசில்ல..
உன் பாசம் புதுசில்ல ..
கெஞ்சவிட்டு கொஞ்சபோற மெல்ல மெல்ல..!!!!

எழுதியவர் : வெ. ஹரிஹர விஸ்வநாதன் (12-Sep-18, 4:13 am)
பார்வை : 1015

மேலே