காதல்

அழகே வடிவெடுத்த ஆரணங்கே என்னவளே,
என்று அவள் அழகில் மதிமயங்கி எப்போதும்
தப்பாமல் அந்த அழகைப்பருகிட எண்ணமும் வளர,
இளமையின் ஆவேசம் ஏதேதோ நல்மதியை மறைக்க,
என்னவளே, உந்தன் புற அழகில் மெய்மறந்து
மெய்யய் மறந்து, உன்னை எப்போதுமோர் காமக்
கேளிக்கைப் பொருளாய் மட்டுமே என்றெண்ணி
காலத்தைக்கழிக்க , இன்று , நீ என்னவளே,
என் கண்களைத்திறந்துவிட்டாய் அம்மா , அப்போது, எப்போது ,
உன்னை நெருங்கி நான் என்றும்போல் காமம் யாசிக்க,, நீயோ
என்னை நெருங்க விடாமல் கூறினாய்............
" போதும் , போதும் என்னவனே, இனி இப்படி
என்னை இப்படி நித்தம் நித்தம் துன்புறுத்தி
காமப்புழுப்போல் துளைத்திட நினைத்திடாதே,
காமமே வாழ்வென்றும் நினைத்திடாதே நீ
நதியின் நீரோட்டத்திற்கும் வரம்பு உண்டு, அதை
மீற நதி வெள்ளமாகிவிடும், துன்பம் தந்திட,
மோகம், காமம் இரண்டிற்கும் எல்லைகளுண்டு
அதை அறிந்து நடந்தால் அதன்பின் மறைந்திருக்கும்
உண்மைக்கு காதல் தேஜோமயமாய் கண்களுக்கு
தெரியும்.............. " என்று நிறுத்தி, ஒருமுறை என்னவள்
கண்ணோடு கான்செர் பார்க்கையில் , அதில் அக்கணமே
கண்டேன் நான் 'அன்பின் பேரொளியை' அதுவே காதல்
என்பது என் மனதில் இப்போது எட்டியது
நான் அவளை இப்போது என்முன்னே என்னவளாய் அல்ல
'காதல் தெய்வமாய்க் கண்டேன்' மெய்யின் பேரொளி
பரப்பி........அதில் கண்டேனே நான் ...................
சேய் தாய், மனைவி, தெய்வம் என்ற இவை
தனித்தனியாய், மற்றும் ஒன்றாய் சேர்ந்த பேரொளியாய்
புத்தி தெளிந்தது, பித்தமும் நீங்கியது

வாழ்வில் இன்று நான் கடைத்தேறினேனே
,

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (12-Sep-18, 6:15 am)
Tanglish : kaadhal
பார்வை : 229

மேலே