இரண்டு கல்யாணமும் ஒரே கல்யாணம் தான்

ஏன்டா வேலு, புது தில்லிலே யாரோ உன்னோட படிச்ச பொண்ணு கல்யாணத்துக்குப் போயிட்டு வந்தயே பொண்ணுக்கேத்த மாப்பிள்ளையா?

இல்லப்பா, என்னோட படிச்ச ரண்டு பொண்ணுங்களுக்கு கல்யாணம்.

அப்ப ரண்டு கல்யாணத்துக்கும் போயி வாழ்த்திட்டு வந்தயா?

ஒரு கல்யாணத்துக்குத்தான் போனேன்.

ரண்டு கல்யாணம்னு சொன்ன. ஒரு கல்யாணத்துக்குப் போயிட்டு இன்னோரு கல்யாணத்துக்குப் போகமுடியலயா?

ரண்டும் ஒரு கல்யாணம்தாம்பா.

என்னடா செந்தில் வாழைப் பழ நகைச்சுவை மாதிரி பேசற?

என்னை அழைச்ச ரண்டு பொண்ணுங்களும் ஒருவரை ஒருவர் காதலிச்சிருக்காங்க. எங்களுக்கு இதெல்லாம் தெரியாது. ஒரு பாலினத் திருமணம் செல்லும்னு உச்ச நீதிமன்றம் தீர்ப்புச் சொன்ன ஒரு வாரத்திலேயே அந்த ரண்டு பொண்ணுங்களும் கல்யாணம் பண்ணீட்டாங்க.

அட சனியனே இது மாதிரிகூட நடக்குமா? அடே நீயும் ஒரு பையனைக் கூட்டிட்டு வந்து அவனத்தான் கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்லீடாதடா.

அப்பா, இயற்கைக்கு எதிரான வேலையை கண்டிப்பா நாஞ் செய்யமாட்டேன். என்ன நூத்துக்கு நூறு நம்பலாம். எல்லாம் மேல் நாட்டுக்காரங்களப் பாத்து கெட்டுப் போறாங்கப்பா.

சரிடா வேலு. நீ என் மகனாச்சே.

எழுதியவர் : மலர் (14-Sep-18, 1:04 am)
பார்வை : 187

மேலே